கை நிறைய கொட்டப்போகுது பணம்.! அழகுசாதனப்பொருட்கள் தயாரிக்க பயிற்சி.! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

First Published | Dec 4, 2024, 7:55 AM IST

நாளுக்கு நாள் மக்கள் அழகு நிலையங்களை தேடி செல்லும் நிலையில், அழகு சாதன பொருட்களுக்கு மக்கள் மத்தியில் கடும் கிராக்கி உள்ளது. கை நிறைய பணத்தை அள்ளிக்குவிக்கும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

job opportunities

தமிழக அரசின் வேலை வாய்ப்பு

தமிழக அரசு சார்பாக வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக அரசு பணிக்கு அரசு பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அடுத்ததாக தனியார் துறையிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மாவட்டம் தோறும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. மேலும் சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறது. இந்த நிலையில் நவீன காலத்திற்கு ஏற்ப பல்வேறு மக்கள் அழகு நிலையங்களை தேடி செல்கின்றனர்.

அழகு பொருட்களுக்கு மக்களின் வரவேற்பு

மேலும் அழகு சாதனப் பொருட்களையும் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து வாங்கி குவிக்கிறார்கள். எனவே அழகு சாதனப்பொருட்களுக்கு கடும் கிராக்கி உள்ளது.  இந்த நிலையில் அழகு சாதனப்பொருட்கள்  தயாரிப்பது தொடர்பாக பயிற்சி வகுப்புகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வகுப்புகளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,


beauty parlor

 அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயிற்சி

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி வரும் 10.12.2024 முதல் 12.12.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. 

soap

மூலிகை பொருட்கள் தயாரிக்க பயிற்சி

இப்பயிற்சியில் தேங்காய் எண்ணெய் சோப்பு. மூலிகை சோப்பு, ஆயுர்வேத சோப்பு. முடி வளரும் எண்ணெய். முடி வளரும் ஷாம்பு. ஃபேஸ் வாஷ் ஜெல், கை கழுவும் திரவம் மற்றும் பயிற்சி வழிமுறைகளுடன் சுயமாக தொழில் தொடங்குவதற்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

குறைந்த வாடகையில் தங்கும் விடுதி

சென்னையில் பங்குபெறும் ஆண், பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 8668102600/7010143022. 600032.

முன்பதிவு அவசியம்:

அரசு சான்றிதழ் வழங்கப்படும்

Latest Videos

click me!