அதிமுகவில் தொடரும் அதிகாரப் போட்டியால் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், ஓபிஎஸ் அணியில் உள்ள மூன்று எம்எல்ஏக்களில் ஒருவர் அவருக்கு ஷாக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிஎச் பாண்டியனின் மகனும், ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏவுமான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
திமுகவிற்கு பல்டி அடிக்க காத்திருக்கும் எம்எல்ஏ.! ஓபிஎஸ்க்கு ஷாக் கொடுக்கும் அந்த நபர் யார் தெரியுமா.?
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியால் இதுவரை தொடர் தோல்விகளை அதிமுக சந்தித்து வருகிறது. தான் தான் அதிமுகவின் தலைவர் என ஒருவருக்கொருவர் போட்டி போட்டி வருகிறார்கள். இதனால் இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என தனித்தனி அணியாக உள்ளது. .இதில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றிய நிலையில், மற்ற 3 பேரும் சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதனிடையே நீதிமன்றத்தில் பல வழக்குகள் உள்ள நிலையில் ஒரு முறை இபிஎஸ்க்கு சாதகமாக வந்தால் மறுமுறை ஓபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பு வருகிறது.
24
அதிமுகவில் தொடரும் உட்கட்சி மோதல்
இதனால் அதிமுகவில் தொடர்ந்து குழப்பமான சூழல் நிலவுகிறது. ஆளுங்கட்சியை எதிர்க்க வேண்டிய தலைவர்கள் தங்களுக்குள்ளாகவே மோதிக்கொள்ளும் நிலை உள்ளது. இதனால் எதிர்கட்சியே இல்லாமல் திமுக உற்சாகத்தில் உள்ளது. மேலும் அதிமுகவில் உள்ள நிர்வாகிகளும் அடுத்தடுத்து பல்வேறு கட்சிகளுக்கு பல்டி அடித்து வருகிறார்கள். அந்த வகையில் திமுக, பாஜக என இணைந்து பொறுப்புகளையும் பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து வெற்றி பெற்ற எம்எல்ஏக்களில் 4 பேர் ஓபிஎஸ் அணியில் உள்ளனர். அதில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் அய்யப்பன் ஆகியோர் உள்ளனர்.
34
ஓபிஎஸ் அணிக்கு ஷாக்
ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரும் தமிழக சட்டமன்றத்தில் தனி அணியாக உள்ளனர். இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இந்த 3 எம்எல்ஏக்கள் ஒருவர் ஷாக் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, அதிமுகவின் மூத்த தலைவராக இருந்தவர் பிஎச் பாண்டியன், அவரது மகன் தான் மனோஜ் பாண்டியன் ஆலங்குளம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் தீவிர ஆதரவாளராக இருந்த மனோஜ் பாண்டியன் தான் திமுகவிற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
44
யார் அந்த எம்எல்ஏ.?
அந்த வகையில் கடந்த சில வாரங்களாகவே ஓபிஎஸ் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் மனோஜ் பாண்டியன் கலந்து கொள்ளவில்லையன தகவல் கூறப்படுகிறது. ஓபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் இதன் காரணமாகவே திமுகவில் இணைய பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் இந்த மாதம் இறுதியில் திமுகவில் மனோஜ் பாண்டியன் இணைய இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.