Published : Feb 13, 2025, 07:54 AM ISTUpdated : Feb 13, 2025, 08:50 AM IST
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆட்சியைப் புகழ்ந்து பேசியது மட்டுமல்லாமல் 250க்கும் மேற்பட்ட தொண்டர்கள் நிர்வாகிகள் பெயரை சுமார் 10 நிமிடம் படித்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி பெயரை ஒரு இடத்தில் கூட குறிப்பிடாமல் உரையை நிறைவு செய்தார்
நானும் எடப்பாடி பழனிசாமிக்கு இணையானவன் தான்! ஒரு இடத்தில் கூட இபிஎஸ் பெயரை உச்சரிக்காத செங்கோட்டைன்!
கடந்த இரண்டு நாட்களாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தொடர்பான செய்தி ஹாட் டாப்பிக்கா பேசப்பட்டு வருகிறது. அதாவது அன்னூரில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற அத்திக்கடவு - அவினாசி திட்ட குழு சார்பில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் பங்கேற்காதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
26
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
இதுதொடர்பாக செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன் விழா தொடர்பான அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறவில்லை. எனவே எனது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்கவில்லை என தெரிவித்தார். இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது அதிமுக விழா இல்லை. விவசாயிகள் ஏற்பாடு செய்த கூட்டம் என விளக்கமளித்திருந்தார்.
இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஏதேனும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடலாம் என்ற தகவலின் அடிப்படையில் செங்கோட்டையன் வீடு அமைந்துள்ள குள்ளம்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனையடுத்து செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களடன் ஆலோசனை ஈடுபட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் செங்கோட்டையன் ஆலோசனை ஏதும் நடைபெறவில்லை. அந்நியூர் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு அழைப்பிதழ் தர வந்துள்ளனர். தினமும் என்னை சந்திக்க வீட்டுக்கு 100, 200 பேர் வருவது வழக்கம் தான் என தெரிவித்திருந்தார்.
46
எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
பின்னர் நேற்று மாலை ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்கு மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எடப்பாடி பழனிசாமிக்கு இணைய அவரது புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன்: என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. நான் எத்தனையோ தலைவர்களை சந்தித்து விட்டு இன்றும் களத்தில் நிற்கிறேன் என்பது என அனைவருக்கும் தெரியும். இங்கு வந்திருக்கும் செய்தியாளர்கள் , ஏதாவது கிடைக்குமா என தேடிக் கொண்டு இருக்கிறீர்கள். எதுவும் கிடைக்காது என்பது தான் என்னுடைய பதில்.
இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான் என்னை சோதிக்காதீர்கள். அதுதான் எனது வேண்டுகோள் நான் செல்கின்ற பாதை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்த பாதை. அவர்களின் படங்கள் இல்லாததால்தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை. எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் கட்சிக்காக பாடுபட்டவன். என்னை வாழவைத்தவர்கள் ஜெயலலிதாவும், எம்ஜிஆரும். நான் தெளிவாக இருக்கின்றேன். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் இருக்கின்றேன். அம்மா விரலை நீட்டும் போதே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான். அவர் ஏன் என்னை கழட்டி விட்டார்? என்பதை சொல்ல முடியாத நிலை உள்ளது என்றார்.
66
எடப்பாடி பழனிசாமி
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆட்சியைப் புகழ்ந்து பேசியது மட்டுமல்லாமல் 250க்கும் மேற்பட்ட தொண்டர்கள் நிர்வாகிகள் பெயரை சுமார் 10 நிமிடம் படித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரைஒரு இடத்தில் கூட குறிப்பிடாமல் உரையை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.