புதுச்சேரியிலும் TVK ராஜ்ஜியம் தான்.. 5ம் தேதி புதுவை செல்லும் விஜய்..

Published : Nov 26, 2025, 10:40 AM IST

தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்ட பின்பு அக்கட்சியின் தலைவர் விஜய் முதல் முறையாக வருகின்ற 5ம் தேதி புதுச்சேரி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் புதுவை தவெக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

PREV
14
புதுவை செல்லும் விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கட்சி தொடங்கிய பின்னர் தமிழகத்தில் விக்கிரவாண்டி, மதுரையில் மாநாட்டை நடத்தி முடித்துவிட்டு திருச்சி, அரியலூர், நாமக்கல் உள்ளிட்டப் பகுதிகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொண்டார். தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின்னர் அவர் எந்தவித மக்கள் சந்திப்பையும் மேற்கொள்ளாமல் இருந்தார்.

24
மிகுந்த கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற மக்கள் சந்திப்பு

இந்நிலையில் அண்மையில் காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை மேற்கொண்ட விஜய். உள் அரங்குக்குள் 2000 நபர்களுக்கு மட்டும் பாஸ் வழங்கப்பட்டு அவர்களுடன் சந்திப்பு நடத்தினார். இதனிடையே விஜய் வருகின்ற டிசம்பர் 5ம் தேதி முதல் முறையாக புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

34
பாதுகாப்பு கோரும் தவெக நிர்வாகிகள்

விஜய் வருகையை முன்னிட்டு புதுச்சேரி தவெக நிர்வாகிகள் சார்பில் பாதுகாப்பு கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல் துறையினர் தற்போது வரை அனுமதி வழங்காத நிலையில், இது உறுதிப்படுத்தப்படாத தகவலாக இருக்கிறது.

44
புதுவையில் தவெக

கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் மிகுந்த நெருக்கம் காட்டி வருகிறார். மேலும் ரங்கசாமிக்கும் கூட்டணிக்கட்சியான பாஜக தரப்பில் இருந்து பல்வேறு குடைச்சல்கள் கொடுக்கப்பட்டு வருவதால் அவர் மிகுந்த வருத்தத்துடனே கூட்டணியில் நீடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு விஜய்யுடன் கைகோர்க்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யின் புதுச்சேரி பயண திட்டம் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories