Modi
தேர்தலில் பாஜகவிற்கு அதிர்ச்சி
இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் சுமார் 2 மாத காலம் நடைபெற்றது. இந்த தேர்தலில் 400 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைப்போம் என பாஜக உறுதியாகக் கூறியது.
அந்த வகையில் தேர்தல் பிரச்சாரமும் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பாஜகவினருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளை கூட பெற முடியாமல் 240 தொகுதிகளையே பாஜக எட்டியது.
annamalai
குட் புக்கில் அண்ணாமலை
அதே நேரத்தில் தமிழகத்தில் பாஜக தோல்வியை தழுவினாலும் பிரதமர் மோடியின் குட்புக்கில் இடம்பெற்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மத்திய அமைச்சராவார் என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த முறை பாஜக ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தை சேர்ந்த எல் முருகன், நிர்மலா சீதாராமன்,ஜெய்சங்கர் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவியில் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று புதிதாக மத்திய அமைச்சரவை பதவி ஏற்கவேண்டிய நிலையில் தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
annamalai
அண்ணாமலைக்கு அழைப்பு
புதிதாக பதவி ஏற்க உள்ள உறுப்பினர்களுக்கு இன்று பிரதமர் மோடி தேனீர் விருந்து அளிக்க உள்ளார். இந்த விருந்தில் பங்கேற்கும்படி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இன்று மாலை நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் அண்ணாமலையும் மத்திய அமைச்சராக பதவி ஏற்பார் என தெரிகிறது .
அதே நேரத்தில் இரண்டு மாநில ஆளுநர் பொறுப்பை தூக்கி எறிந்து விட்டு அரசியல் களத்திற்கு மீண்டும் வந்த தமிழிசை தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை அடைந்தார். எனவே அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.