Annamalai vs BJP: ஆணவம், திமிரால் சொந்த ஊரிலேயே அண்ணாமலை பெற்ற வாக்குகளை இது தான்.!!மீண்டும் சீறிய கல்யாணராமன்

First Published | Jun 9, 2024, 9:18 AM IST

நன்கு படித்த இளைஞர்களுக்கு சமூகத்தில் மரியாதை உண்டு அதிலும் குறிப்பாக ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு ஊரே அவர்களை உச்சிமுகர்ந்து கொண்டாடும் அதையும் மீறி ஒரு நபர் மிகச் சொற்பமான வாக்குகளை பெறுகிறார் என்றால் அவருக்கு ஊரில் மரியாதை இல்லை என்று அர்த்தம் என அண்ணாமலையை பாஜக மூத்த நிர்வாகி கல்யாணராமன் கடுமையாக விமர்சித்துள்ளார். 

பாஜக உட்கட்சி மோதல்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக பாஜகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 40க்கு 40 இடங்களில் தோல்வி அடைந்த நிலையில், வாக்கு சதவிகிதம் அதகரித்து இருப்பதாக ஒரு தரப்பிலும், மற்றோரு தரப்பிலோ வாக்குகள் அதிகரிக்கவில்லையென விமர்சித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் மீண்டும் அரசியல் களத்திற்கு வந்த தமிழிசைக்கும் - அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் தொடங்கியுள்ளது. மாநில தலைவர் இருக்கும் போது அரசியல் தொடர்பாக தமிழிசை பேசக்கூடாது என அண்ணாமலை பாஜக வார் ரூம் சமூகவலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.

கங்கனாவை அறைந்த கைக்கு தங்க மோதிரம்! பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு!
 

வார் ரூம்- மிரட்டி பணம் வசூல்

இதனையடுத்து அறிவுசார் பிரிவு மாநில தலைவர் கல்யாணராமன் சரமாரி புகார் தெரிவித்துள்ளார். அண்ணாமலையை முன்னிலைப்படுத்த, பிற பாஜக தலைவர்களை சிறுமைப்படுத்த 2 வார் ரூம்கள் செயல்படுகின்றன. அண்ணாமலை வார் ரூமை நிர்வகிப்போரில் ஒருவர் ED வழக்குகளில் தொடர்புடையோரை மிரட்டி பணம் பறித்து வருகிறார்.

தங்கக் கடத்தல்காரர்கள், ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி செய்தோரிடம் வார் ரூம் மூலம் பணம் பறிக்கின்றனர்,”இவ்வாறு தெரிவித்தார். இதற்கு அண்ணாமலை ஆதரவாளர்கள் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர். 

Tap to resize

bjp kalyanaraman

அண்ணாமலை சொந்த ஊரில் பெற்ற வாக்குகள்.?

இந்தநிலையில் மீண்டும் தனது சமூக வலைதளத்தில் பாஜக மூத்த நிர்வாகி கல்யாணராமன் வெளியிட்டுள்ள பதிவில், 2019-ல் சொந்த ஊருக்கு திரும்பிய அந்த மாமேதை ஊரில் ஆடு மாடுகளை மேய்த்து நிலத்தை உழுது விதை விதைத்து நாட்டு நட்டு கலை எடுத்து அறுவடை செய்த காரணத்தால் அந்த ஊரில் உள்ள மக்கள் எல்லாம் மகிழ்ச்சி பொங்க பெரும் ஆர்வத்துடன் வாக்களிக்க நமது தன்னிகரில்லா தலைவன் சொந்த ஊரில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 23 எதிர்த்து போட்டியிட்ட நபர் படுதோல்வி அடைந்து 96 சதவீதத்தை பெற்றார்.

Narayanasamy: புதிதாக பதவி ஏற்கவுள்ள ஆட்சி குறைபிரசவ ஆட்சியாக தான் அமையும் - நாராயணசாமி கணிப்பு
 

bjp kalyanaraman

ஆணவம், திமிர்

தேர்தல் களம் அரவக்குறிச்சி தேர்தல் ஆண்டு 2021 தேர்தலின் வெற்றி வேட்பாளர் கர்நாடக பங்கம். பேச வேண்டுமென்றால் இது போன்ற விஷயங்களை பேச வேண்டும். அதிலும் குறிப்பாக ஊரை ஏமாற்றாதே என்று கூற வேண்டும். பொதுவாகவே நன்கு படித்த இளைஞர்களுக்கு சமூகத்தில் மரியாதை உண்டு அதிலும் குறிப்பாக ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு ஊரே அவர்களை உச்சிமுகர்ந்து கொண்டாடும்,

அதையும் மீறி ஒரு நபர் மிகச் சொற்பமான வாக்குகளை பெறுகிறார் என்றால் அவருக்கு ஊரில் மரியாதை இல்லை என்று அர்த்தம் அப்படி என்றால் அவரது பழக்கவழக்கங்கள் அணுகுமுறைகள் ஆணவம் திமிர் போன்ற விஷயங்களை இந்த சமூகம் பார்க்கிறது ஆனால் அது ரசிக்க முடியவில்லை என்று சொல்லாமல் சொல்கிறது என கல்யாணராமன் விமர்சித்துள்ளார். 

Latest Videos

click me!