தமிழக சட்டமன்ற தேர்தல் நெருக்க நெருங்க அரசியல் களம் மாறி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதுப்பது தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக 200 தொகுதிகளை கைப்பற்றும் வகையில், தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, உட்கட்சி மோதல் தொடர்பாக களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
இதேபோல அதிமுகவும் பலம் வாய்ந்த திமுக கூட்டணியை வீழ்த்த புது கூட்டணியை உருவாக்க காய் நகர்த்தியது. முதலில் நடிகர் விஜய்யின் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் நடிகர் விஜய்யின் தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு உள்ளிட்ட கோரிக்கையால் அங்கிருந்து விலகியது அதிமுக, அடுத்தாக திமுகவிற்கு எதிராக வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் பாஜகவுடன் கூட்டணியை மீண்டும் உறுதி செய்தது.