தமிழக அரசு, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிருக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க ரூ.5,000 மானியம் வழங்குகிறது. விண்ணப்பிக்க அழைப்பு
மகளிர் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்குவதற்கான மானியத் தொகையினை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர். கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும். பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
24
கிரைண்டர் வாங்க 5ஆயிரம் மானியம்
2025-2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 10,000/- அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5,000/-மானியத் தொகையாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மகளிர் தமிழ்நாட்டில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும். ( பிறப்பிடச் சான்று). வயது வரம்பு 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும்.
34
கிரைண்டர் வாங்க என்ன தகுதிகள்.?
பிறந்த தேதிக்கான சான்று மற்றும் திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாச்சியரிடம் பெறுதல் வேண்டும் ) போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமான வரம்பு ரூ. 1.20 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் (வருமானச் சான்று வட்டாச்சியிரிடமிருந்து பெறுதல் வேண்டும்) எனவே,
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மகளிர் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர். சிங்கார வேலனார் மாளிகை. 8 வது தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவகத்தில் 25.07.2025-ற்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
44
விண்ணபிக்க தேதி அறிவிப்பு
உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இத்திட்டத்திற்கு தகுதியுள்ள பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்படுவர். இதர விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் என சென்னை மாவட்ட ஆட்சித் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.