தமிழக அரசின் அடுத்த சூப்பர் திட்டம்.! 50,000 ரூபாய் வேண்டுமா.? உடனே விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசு மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களுக்கு ரூ.50,000 மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த மானியத்தை பெறுவதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை இங்கே விளக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மகளிர் முன்னேற்ற திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுமைப்பெண் திட்டம், பெண்களுக்கு இலவச பயணத்திட்டம், திருமண உதவித் திட்டங்கள், குடும்ப ஆலோசனை மையம், தொட்டில் குழந்தை திட்டம், தையல் இயந்திரம் இலவசமாக வழங்கும் திட்டம் உள்ளிட்டவைகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது மட்டுமில்லாமல் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு பிரபல தனியார் நிறுவனங்கள்பணியாளர்கள் தேர்வில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தால் 50ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

magalir urimai thogai

மகளிர் உதவித்திட்டங்கள்

நிலையில் அதன் ஒரு பகுதியாக மகளிர் முன்னேற்றத்திற்காக  50ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில்  கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களுக்கு தமிழக அரசின் ரூ. 50,000/- மானியம் வழங்கும் திட்டத்திற்கு ஆதரவற்ற மகளீர் நலவாரியத்தில் விண்ணப்பித்து பயனடையும்மாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
 


Magalir loan

50ஆயிரம் உதவித்தொகை

மேலும் தமிழக அரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் அரசாணை (நிலை) எண். 49. நாள். 12.08.2024 ல் கைம்பெண்கள். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு சுய தொழில் செய்வதற்கு ரூ.50000/-வீதம் சுய தொழில் செய்து சுயமரியாதையுடன் வாழ்வதற்கு 1.00 கோடி ரூபாய் மானியம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்தின் கீழ் பயனடைய பின் வரும் தகுதிகளை கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  

தகுதிகள் என்ன.?

கைம்பெண்கள் வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும். 

வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை

.25 முதல் 45 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்

ஒருவர் ஒரு முறை மட்டுமே மானியம் பெற தகுதியுடைவர் ஆவார்.

அரசு ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்: ரூ.5 லட்சம் உயர்த்திய தமிழ்நாடு அரசு - ஊழியர்கள் மகிழ்ச்சி
 

விண்ணப்பிக்க அழைப்பு

மேலும் கைம்பெண்கள் நலவாரியத்தில் உறுப்பினர் ஆவதற்கு www.tnwidowwelfareboard.in.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து உறுப்பினர் ஆகலாம். சுயதொழில் செய்வதற்கு மானியம் பெற அளிக்கப்படும் விண்ணப்பத்துடன் இந்த சான்றுகள் இணைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் என்பதற்கான சுய அறிவிப்பு, வருமானச்சான்று. குடும்பஅட்டை நகல், ஆதார் அட்டை நகல், தற்போதைய வசிப்பிட முகவரிக்கான ஏதேனும் ஒரு சான்று. மேற்காணும் சான்றுகளுடன் கைம்பெண்கள் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் விண்ணப்பித்துபயனடையுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
 

பெண்களின் முன்னேற்ற திட்டம்

சிற்றுண்டி கடைகள், நடமாடும் பழச்சாறு கடைகள், நடமாடும் உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், சலவைகடைகள் போன்ற சுய தொழில் செய்ய உதவி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!