Tamilnadu Government Employee: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 20 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்வு!

First Published | Sep 12, 2024, 11:17 PM IST

பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் தமிழக அரசு ஊழியர்களின் பணிக்கொடை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பணியில் உள்ள பணியாளர்கள் 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்னர் பணியில் சேர்ந்த ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்திக் கீழ் வருவார்கள். அதே போன்று ஏப்ரல் 1ம் தேதிக்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வருகின்றனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக் கொடையாக ரூ.20 லட்சம் அரசு சார்பில் வழங்கப்பட்டது. இந்த தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் நபர்களுக்கு ரூ.25 லட்சம் பணிக்கொடையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Tap to resize

இது தொடர்பாக தமிழக நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள உத்தரவில், “தமிழ்நாடு அரசு கடந்த 2017ம் ஆண்டு வெளியிட்ட அரசாணையின் படி ஓய்வு கால பணிக் கொடை மற்றும் இறப்பு பணிக்கொடை ஆகியவை 2016ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி கணக்கிட்டு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டது.

pension

மேலும் அதிகபட்ச பணிக்கொடை தொகையில் இருந்து 25 சதவீதம் அதாவது ரூ.20 லட்சத்திற்கு ரூ.5 லட்சம் என்ற அளவில் பணிக்கொடை உயர்த்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியான 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 7வது ஊதிய கமிஷனின் பரிந்துரைப்படி ஓய்வு கால பணிக்கொடை மற்றும் இறப்பு கால பணிக்கொடையானது ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டது.
 

பயணர்களுக்கான இந்த உயர்வு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் இதில் பயன் பெறுவார்கள். இது தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் தகுந்த உத்தரவுகளை ஓய்வு பெறும் ஊழியர்களுக்கான பணிக்கொடையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Videos

click me!