இந்தியாவில் போக்குவரத்து துறையில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறை. தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவ்வப்போது தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள், சிக்னல் பணிகள், மற்றும் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட காரணங்களுக்கான முக்கிய வழித்தடங்களில் அவ்வப்போது ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதும் பகுதியாக ரத்து செய்யப்பட்டு மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுவதும் வழக்கம்.
25
Villupuram to Tirupati Train
இது குறித்து ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு முன்கூட்டியே ரயில்வே நிர்வாகம் சார்பில் முன்கூட்டியே தெரிவிக்கப்படும். அந்த வகையில் தற்போது விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு ரயில் மூலம் செல்லும் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: திருப்பதி- காட்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையேயான பகுதியில் பொறியியல் மற்றும் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக, விழுப்புரம்- திருப்பதி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பகுதி அளவில் ரத்து செய்யப்படுகிறது.
45
Villupuram to Tirupati
அதன்படி, விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும் விரைவு ரயில் நேற்று முதல் 20-ம் தேதி வரை காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் காட்பாடியில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினந்தோறும் விழுப்புரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வந்த நிலையில் தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் திருப்பதி பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.