12ஆயிரம் ரூபாயை உதவி தொகையாக அள்ளித்தரும் தமிழக அரசு.! வெளியான சூப்பர் அறிவிப்பு

First Published | Oct 30, 2024, 12:56 PM IST

தமிழ்நாடு தொழிலாளர் நல நிதியம், தொழிலாளர்களின் குழந்தைகளின் பள்ளி படிப்பிற்காக நிதி உதவி வழங்குகிறது. பாலர் பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 12ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தொழிலாளர்கள் விண்ணப்பங்களை www.lwbtn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

tamilnadu

தமிழக அரசு திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஓரு பகுதியாக நிதி உதவி திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை, கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை, சுய தொழில் செய்ய உதவித்தொகை என பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இந்தநிலையில் தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளுக்கு தமிழ்நாடு தொழிலாளர் நல நிதியம் ஒருங்கிணைந்ததாகும். அந்த வகையில் தொழிலாளர்களின் குழந்தைகளின் பள்ளி படிப்பிற்காக நிதி உதவியானது வழங்கி வருகிறது. இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

Workers

கல்வி உதவி தொகை

அதன் படி, தொழிற்சாலைகள், உணவு நிறுவனங்கள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆண்டு தோறும் தொழிலாளர் மற்றும் நிறுவனத்தின் பங்காக 60 ரூபாய் என  ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலாளர் நல நிதி தொகையினை வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.

அந்ந வகையில்  2024-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியினை அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் வாரியத்தில் உறுப்பினர்களாக ஊழியர்களின் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

Latest Videos


labour

1000 ரூபாய் முதல் 12 ஆயிரம் உதவி தொகை

அந்த வகையில் பிரிகேஜி  முதல் பட்டப்படிப்பு வரை படிக்கும் தொழிலாளர்களின் குழுந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 12ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பாட புத்தகங்கள், 10வது மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டங்களுக்கு வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

cash

டிசம்பர் 31 கடைசி தேதி

மேலும் இந்த உதவி தொகை பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, தொழிலாளர்களின் மாத ஊதியம் ரூ.35 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwbtn.gov.in என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் வாரியத்துக்கு வந்து சேர வேண்டிய கடைசிநாள் டிசம்பர் 31-ந் தேதி ஆகும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

click me!