ஒரே நேரத்தில் 2877 அரசு காலிபணியிடங்களை நிரம்ப உத்தரவு.! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

First Published Oct 30, 2024, 10:45 AM IST

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 2877 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. டிரைவர் மற்றும் நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2340 டிசிசி பணியாளர்கள் மற்றும் 537 தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

தமிழகத்தில் அரசு பேருந்து சேவை

ஏழை, எளிய மக்கள் பயணம் செய்ய அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து துறைக்கு சொந்தமான 8 அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மொத்தமாக  20 ஆயிரத்து 260 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 1.76 கோடி மக்கள் பயணிக்கின்றனர். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகளையில் தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவாகவே உள்ளது. அந்த வகையில் பேருந்து சேவைய தமிழக மக்கள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தமிழக அரசின் விடியல் திட்டத்தின் மூலம் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

tamilnadu bus

இலவச பேருந்து திட்டங்கள்

பள்ளி மாணவர்களுக்கும் இலவச பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது. முதியோர்களும் இலவசமாக பயணம் செய்ய டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. போக்குவரத்து துறையில் பொதுமக்கள் அதிகளவு பயணம் செய்தாலும், பல்வேறு இலவச திட்டங்களால் உரிய வருவாய் கிடைக்காமல் திணறி வருகிறது. இதனால் புதிய பேருந்துகள் வாங்குவதிலும், ஊழியர்களுக்கு நிலுவை தொகை வழங்குவதிலும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பதிலாக புதிய தொழிலாளர்கள் பணி நியமனம் செய்வதிலும் காலதாமதம் ஏற்பட்டது.

Latest Videos


காலிபணியிடம் நிரப்ப அனுமதி

இதன் காரணமாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அதிக வேலை பளு ஏற்பட்டது. குறிப்பாக  டிரைவர் பற்றாக்குறை காரணமாக 2022-2023-ம் ஆண்டில் மட்டும் 29 லட்சத்து 70 ஆயிரம் தடவை பேருந்து சேவை தடைபட்டுள்ளது.  8 அரசு போக்குவரத்து கழகங்களிலும் ஒட்டுமொத்தமாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளது. எனவே காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்துள்ளது. இந்தநிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 2877  இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Women Bus

எத்தனை பணியிடங்கள் நிரப்ப உத்தரவு.?

இது தொடர்பாக போக்குவரத்து துறை அரசாணை வெளியிட்டுள்ளது. டிரைவர்  மற்றும் நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2ஆயிரத்து 340 டிசிசி பணியாளர்கள் மற்றும் 537 தொழில்நுட்ப பணியாளர்கள் காலி இடங்களை நிரப்ப அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

 இதில் 307 டிசிசி மற்றும் 462 தொழில்நுட்ப பணியாளர்கள் என்று மொத்தம் 769 காலி இடங்கள் எஸ்சி, எஸ்டி  பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மீதம் உள்ள 2108 பணியிடங்கள் மற்ற பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 307 டிசிசி 75 தொழில்நுட்ப பணியாளர்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!