ஏக்நாத் ஷிண்டே தான் செங்கோட்டையனா.? அதிமுகவை உடைக்க திட்டமா.? எடப்பாடிக்கு எதிராக சீறியது ஏன்.?

Published : Mar 16, 2025, 09:17 AM ISTUpdated : Mar 16, 2025, 09:27 AM IST

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டுள்ளது. செங்கோட்டையன் இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
16
 ஏக்நாத் ஷிண்டே தான் செங்கோட்டையனா.? அதிமுகவை உடைக்க திட்டமா.? எடப்பாடிக்கு எதிராக சீறியது ஏன்.?

ADMK internal conflict : தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவையே திருப்பி பார்க்கும் வகையில் அதிமுகவை மிகப்பெரிய கட்சியாக உருவாக்கியவர் ஜெயலலிதா. ஆனால் அவரது மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அதிகார போட்டியால் கட்சியானது பல பிளவுகளை சந்தித்துள்ளது. இதன் காரணமாக அதிமுகவை கைப்பற்றிய இபிஎஸ் ஒரு பக்கம், ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என மற்றவர்கள் மறு பக்கம் என பிரிந்துள்ளனர்.

இதன் காரணமாக கட்சி நிர்வாகிகளுக்குள் ஒற்றுமை இல்லாமல் தனியாக தவித்து வருகிறது அதிமுக, கடந்த 8 வருடங்களில் நடைபெற்ற ஒரு தேர்தல்களில் கூட அதிமுக சொல்லிக்கொள்ளும் வகையில் வெற்றியை பெறவில்லை.

26
அதிமுகவில் உட்கட்சி மோதல்

ஆளுங்கட்சியை எதிர்க்க வேண்டிய அதிமுக, தங்களுக்குள் ஏற்பட்ட மோதலால் உட்கட்சிக்குள் மோதிக்கொண்டுள்ளது. இந்த நிலையில் அதிமுகவின் மூத்த தலைவராக உள்ள செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளருக்கு எதிராக தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளார். அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் ஜெயல்லிதா புகைப்படங்கள் வைக்காமல் இபிஎஸ் படத்தை மட்டும் வைத்தது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனையடுத்து ஈரோட்டில் நடைபெற்ற கூட்டங்களில் இபிஎஸ் பெயரை உச்சரிக்காதது, எடப்பாடி பழனிசாமி படத்தை சிறியதாக பதிவிட்டது என மறைமுகமாக செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தார். 

36
எடப்பாடியை எதிர்க்கும் செங்கோட்டையன்

இந்த நிலையில் தான் இந்த மோதல் சட்டசபை கூட்டத்தொடரில் வெட்ட வெளிச்சமானது. இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது. அதிமுக எம்எல்ஏக்கள் அறைக்கு செல்லாதது என தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். இதனால் அதிமுகவினர் மத்தியில் பதற்றமான நிலை நீடித்து வருகிறது.

செங்கோட்டையனின் இந்த மோதல் விவகாரம் தொடர்பாக இபிஎஸ் கூறுகையில், செங்கோட்டையன் என்னை ஏன் சந்திக்கவில்லை என அவரிடமே கேளுங்கள். நான் என்றும் யாரையும் எதிர்ப்பார்ப்பவன் அல்ல. நான் இந்தக் கட்சியில் தலைவன் கிடையாது.

46
தனித்து செயல்படும் செங்கோட்டையன்

ஒரு தொண்டன் தான் என தெரிவித்தார். இங்கு எல்லோரும் சுதந்திரமாக செயல்படலாம். யார் எங்கு எப்படி வேண்டுமானாலும் போகலாம் யாரும் யாரையும் கேட்கமாட்டார்கள் என கூறியிருந்தார்.  இதனிடையே சபாநாயகரை திடீரென சந்தித்தது ஏன் என செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்தவர், "சபாநாயகரை சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பது சாதாரணமானது. இன்று கூட ஏழு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்துள்ளார்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்ததாக தெரிவித்திருந்தார்.

56
பிரதமரை புகழும் செங்கோட்டையன்

இந்தநிலையில் நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற  நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய செங்கோட்டையன், பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியிருந்தார். அவர் பேசுகையில், பிரதமர் மோடியை போன்று ஒரு தலைவர் இல்லை, நாட்டிற்காக பல திட்டங்களை செய்துள்ளார் என ஆஹோ ஓஹோவென புகழ்ந்து பாராட்டினார்.

இந்த பேச்சு அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் பட்டும் படாமல் இருக்கும் செங்கோட்டையன், பாஜகவில் இணைய இருப்பதாகவும் பரபரப்பாக  பேசப்பட்டு வருகிறது.

66
அதிமுகவை உடைக்க திட்டமா.?

இன்னும் ஒரு சிலரோ மஹாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்த ஏக்நாத் ஷிண்டே போன்று அதிமுகவை இரண்டாக உடைக்க செங்கோட்டையன் திட்டமிட்டு வருவதாகவும் தனது ஆதரவு எம்எல்ஏக்களோடு பாஜகவில் இணைய இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.

இதற்கு ஏற்றார் போல பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய செங்கோட்டையனின் வீடியோவிற்கு கீழ் கமெண்டில் செங்கோட்டையன் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரை இணைத்து நெட்டிசன்கள் மற்றும் அதிமுகவினர் பதிவு செய்து வருகிறார்கள். 

Read more Photos on
click me!

Recommended Stories