மதுபான கொள்முதலில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்திருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு "கலைஞர் மதுபான விற்பனை நிலையம்" என பெயர் சூட்டுவது ஏக பொருத்தமாக இருக்கும் என எச்.ராஜா கூறியுள்ளார். இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மக்களின் வரிப்பணத்தில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களுக்கு "கலைஞர் நூற்றாண்டு நினைவு" என்கிற ஸ்டிக்கர் ஒட்டி பெயர் சூட்டும் திமுக அரசு. கருணாநிதி அவர்கள் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதலில் கொண்டு வந்த திட்டம் மது விற்பனை திட்டம் தான்.