உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூத்த தலைவர் செங்கோட்டையன் உடனான மோதல் உச்சம் பெற்று தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.
25
former minister sengottaiyan
இந்நிலையில் தமிழகத்தில் 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கலந்து கொண்டார். ஆனால் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் புறக்கணித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
35
அதேபோல் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளாமல் செங்கோட்டையன் சபாநாயகர் அறைக்கு சபாநாயகர் அப்பாவுவை தனியாக சந்தித்து பேசியிருந்தார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
45
former minister sengottaiyan
இதற்கு பதிலளித்த அவர் அதை அவரிடம் கேளுங்கள். அவரிடம் கேட்டால்தான் என்ன காரணம் என்று தெரியும். அவரையே போய் கேளுங்க சார். தனிப்பட்ட பிரச்சினையை எல்லாம் இங்கு பேசாதீர்கள். எங்களுக்கு 62 எம்.எல்.ஏ.க்கள். ஆனால் இங்கு எத்தனை பேர் வந்திருக்கிறோம் பாருங்க. அவரவர்களுக்கு வேலை இருக்கும். இது சுதந்திரமாக செயல்படக் கூடிய கட்சி. திமுக போல அடிமையாட்கள் இங்கு கிடையாது. நான் என்றைக்கும் யாரையும் எதிர்பார்த்தது கிடையாது. நான் ஒரு சாதாரண தொண்டன் தலைவன் கிடையாது. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போகலாம். எங்களுக்கு ஒரே எதிரி திமுக. மற்ற கட்சிகள் எல்லாம் எங்களுக்கு எதிரியே கிடையாது என கூறினார்.
55
சமீபத்தில் வேலுமணியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டபோதும், அவரை சந்திப்பதை செங்கோட்டையன் தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.