Published : Mar 15, 2025, 08:32 AM ISTUpdated : Mar 15, 2025, 08:42 AM IST
Tiruchendur-Tirunelveli Train: திருநெல்வேலி அருகே ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் காரணமாக நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியாவில் போக்குவரத்து துறையில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறை. தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம் என்பதால் அதிகளவில் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். அதேபோல் தொலை தூரம் பயணம் செல்பவர்களும் பேருந்து பயணத்தை விட ரயில் பயணத்தில் அழகை ரசித்து கொண்டு செல்ல பெரும்பாலாலும் ஆர்வம் காட்டுகின்றனர்.
24
Southern Railway
இந்நிலையில் அவ்வப்போது தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள், சிக்னல் பணிகள், மற்றும் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட காரணங்களுக்கான முக்கிய வழித்தடங்களில் அவ்வப்போது ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதும் பகுதியாக ரத்து செய்யப்பட்டு மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுவதும் வழக்கம்.
இந்நிலையில் திருநெல்வேலி அருகே ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: திருநெல்வேலில் இரண்டாம் ரயில் வழித் தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் காரணமாக, பின்வரும் ரயில்கள் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை மொத்தம் 25 நாட்கள் ரத்து செய்யப்படுகின்றன.
44
Tiruchendur - Tirunelveli Train Cancelled
நெல்லை - திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலும், திருச்செந்தூர் - நெல்லை இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.