TN Weather Update
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் மீண்டும் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் வரும் நாட்களில் வெயில் தாக்கம் எப்படி இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 16ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
Temperatures will increase
அதேபோல் மார்ச் 17 முதல் 19ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 20ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதையும் படிங்க: தமிழகத்தில் மீண்டும் மிரட்டப்போகிறதா மழை? வானிலை மையம் கூறுவது என்ன?
Heatwave
இன்று தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° அதிகமாக இருக்கக்கூடும். மார்ச் 15 முதல் 18ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° அதிகமாக இருக்கக்கூடும். மேலும் நாளை முதல் 17ம் தேதி வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, வடதமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
Chennai weather
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.