ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போட்டி டிக்கெட் வைத்திருப்பவர்கள் மைதானம் வரை இலவசமாக மெட்ரோவில் பயணிக்கலாம். போட்டி நாட்களின்போது மெட்ரோ ரயில் சேவைகள் நீட்டிக்கப்படும்.
Free chennai metro train travel : சென்னையில் நாள் தோறும் போக்குவரத்து நெரிசல் காரணமாக குறித்த இடத்திற்கு செல்ல பல மணி நேரம் ஆகும். இதனால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த வகையில் மின்சார ரயில்களுக்கு இணையாக கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே சென்னையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல குறைந்த நேரத்தில் எளிதாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பொதுமக்களின் வசதிக்காக சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது.
25
சென்னையில் ஐபிஎல் போட்டி
அதன் படி ஐபிஎல் போட்டியையொட்டி அடுத்த இரண்டு மாதங்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் 2025 போட்டிகளுக்கு வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
35
இலவச மெட்ரோ ரயில் பயணம்
இந்த முயற்சியானது, ஸ்பான்சர் செய்யப்பட்ட இலவச மெட்ரோ பயணத்தை ரசிகர்களுக்கு வழங்குவதன் மூலம் போட்டி நாள் அனுபவத்தையும் மேம்படுத்துகிறது மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சென்னையில் CSK போட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் மெட்ரோ இரயில் சேவைகளை இரவு நீட்டிப்பதுடன், பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்கும்.
45
சிறப்பு மெட்ரோ ரயில் சேவை
கூடுதலாக, ஸ்பான்சர் செய்யப்பட்ட IPL போட்டிகான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் எந்த மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ இரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம். விளையாட்டுப் போட்டி நடைபெறும் நாட்களில் பயணிகளின் தேவையைப் பொறுத்து, போட்டி முடிந்த பிறகு மெட்ரோ இரயில் சேவை 90 நிமிடங்கள் வரை அல்லது அதிகபட்சமாக நள்ளிரவு 1:00 மணி வரை நீட்டிக்கப்படும்.
55
நள்ளிரவு வரை மெட்ரோ ரயில்
ஒவ்வொரு போட்டி நாளுக்கு முன்பும் கடைசி மெட்ரோ இரயில் புறப்படும் நேரம் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மூலம் அறிவிக்கப்படும். பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.