Magalir Urimai Thogai: அதிகப்படுத்தப்படுகிறதா மகளிர் உரிமைத்தொகை திட்டம்? பரபரக்கும் முக்கிய தகவல்கள்

First Published | Oct 23, 2024, 7:29 AM IST

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை விரைவில் விரிவாக்கம் செய்யப்படலாம் என்றும், இந்த திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Magalir Urimai Thogai

தமிழகத்தில் திமுக அரசால் செயல்படுத்தப்பட்டு மெகாஹிட் அடித்த திட்டங்களில் ஒன்றாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் இந்த திட்டத்தால் பல குடும்ப தலைவர்கள் பொருளாதாரத்தில் சற்று தன்னிறைவு பெறுகின்றனர். இத்திட்டம் தொடர்பான அறிவிப்புகள் அவ்வபோது வந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் தற்போது திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

Magalir Urimai Thogai

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அந்த தேர்தலை நடத்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. ஆனால் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தற்போது முதலே தயாராகி வருகிறது. இது தொடர்பாக அக்கட்சி சார்பில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவையும் அமைத்து திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Tap to resize

Magalir Urimai Thogai

இதனிடையே உள்ளாட்சி தேர்தல்களை தற்போதைக்கு நடத்த வேண்டாம். ஒருவேளை உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் திமுக.வுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் அது எதிர்கட்சிகளுக்கு மிகப்பெரிய பலமாக மாறிவிடும். மேலும் தற்போது கூட்டணியில் சில சர்ச்சைகளும் எழுந்து வருவதால், கூட்டணியிலும் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தல்களை தற்போதைக்கு நடத்தக் கூடாது என்று திமுக மூத்த நிர்வாகிகள் திட்டவட்டமாக கூறி வருகின்றனராம்.

Magalir Urimai Thogai Scheme

இது ஒருபுறம் இருக்க தொகுதி வாரியாக 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்களை தேர்வு செய்யும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விரிவு செய்த பின்னர் உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் அது திமுக.வுக்கு சாதகமான முடிவை பெற்றுத்தரும் என்று மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர். திட்டம் ஏற்கனவே விரிவு செய்யப்பட்டு இருந்தாலும், அதிலும் பயன்பெற முடியாமல் சிலர் சிக்கலை சந்தித்துள்ளனர்.

Magalir Urimai Thogai

ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், புதிதாக திருமணமாகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். அடுத்த ஆண்டு மீண்டும் இத்திட்டம் விரிவு செய்யப்படலாம் என்றும், அப்போது புதிதாக திருமணம் ஆனவர்கள், அரசுப் பணியில் இருந்து காலமான ஆண்களின் மனைவிகள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Latest Videos

click me!