பொதுமக்கள் விரும்புரம் ரயில் சேவை
வெளியூருக்கு பயணம் செய்யும் போது பொதுமக்கள் அதிகம் விரும்புவது ரயில் சேவையைத்தான். அந்த அளவிற்கு பொதுமக்களின் விருப்பமாக ரயில் பயணம் உள்ளது. பாதுகாப்போடு அத்தியாவசிய தேவைகளும் ரயில்களில் இருப்பதால் அதில் பயணம் செய்யவே முக்கியத்துவம் வழங்குவார்கள். மேலும் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு ஏற்ற போக்குவரத்தாகவும் ரயில் உள்ளது. சாதாரண மக்களும் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய முடியும்.
இதன் காரணமாகவே 120 நாட்களுக்கு முன்பாக ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கினாலும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு உடனடியாக முடிவடைந்து விடுகிறது. இந்த நிலையில் தான் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிக்க பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே துறை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் ஏற்கனவே இரண்டு அல்லது 3 மட்டுமே இருக்கும் அதனை அதிகரிக்கப்பட்டு வருகிறது.
ரயில்களில் கூட்ட நெரிசல்
மேலும் விஷேச நாட்களில் கூடுதல் ரயில்களும் இயக்கப்படுகிறது. அதன் படி தீபாவளி பண்டிகையையொட்டி லட்சக்கணக்கான பயணிகள் வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு வசதியாக முன்பதிவு செய்யப்படாத ரயில்கள், கூடுதல் ரயில் பெட்டிகள், சிறப்பு ரயில்கள் இயக்கி வருகிறது. அதன் படி தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது அந்த வகையில் கன்னியாகுமரி, செங்கோட்டை, கோவை, கன்னியாகுமரிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்
அந்த வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 5ஆம் தேதிகளில் ரயில் இயக்கப்படுகிறது. (ரயில் எண் 06001 / 06002 ) மறு மார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 6ஆம் தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது சென்னை சென்ட்ரல் எழும்பூர் வழியாக செங்கல்பட்டு,விழுப்புரம் திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரியை சென்று சேருகிறது.
செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.(ரயில் எண் 06005/06006)) அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 6ஆம் தேதிகளில் சென்னையிலிருந்தும், அக்டோபர் 31 நவம்பர் 7ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து சிறப்பு ரயிலானது இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலானது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயிலானது திருவள்ளூர், அரக்கோணம், சேலம், திண்டுக்கல், மதுரை, சிவகாசி, தென்காசி வழியாக செங்கோட்டையை சென்று சேருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவைக்கு சிறப்பு ரயில்
சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கும் சிறப்பு ரயிலானது இயக்கப்படுகிறது. ரயில் எண் (06037/06038) இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பர் 2ஆம் தேதி இயக்கப்படுகிறது. மறு மார்க்கத்தில் 3ஆம் தேதி மங்களூரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயிலானது திருவள்ளூர், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை, வழியாக மங்களூர் சென்று சேருகிறது.
தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்
தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கும், கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயிலானது இயக்கப்படுகிறது.( ரயில் எண் 06049/06050) இந்த ரயிலானது அக்டோபர் 29, நவம்பர் 5 மற்றும் நவம்பர் 12ஆம் தேதியில் தாம்பரத்திலிருந்து ரயில் புறப்படுகிறது. இதே போல கன்னியாகுமரியில் இருந்து அக்டோபர் 29 நவம்பர் 5 நவம்பர் 12ஆம் தேதிகளில் இயக்கப்படுகிறது.
இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து புறப்பட்டு விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரியை சென்று சேர்கிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று(23.10.2024) காலை 8 மணி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது