Schools Leave
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாகவே நல்ல மழை வெளுத்து வாங்கி வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் பெய்யும் கனமழையால் அவ்வப்போது சாலைகளில் தண்ணீர் தேங்குவது, அதன் பிறகு அது வடிவதும் வாடிக்கையான விஷயமாக மாறி இருக்கிறது. வேளச்சேரி போன்ற பகுதிகளுக்கு அருகில் இருக்கும் மக்கள் ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக தங்களுடைய இருசக்கர வாகனங்களை குடியிருப்புக்கு உள்ளாகவே நிறுத்தி வைத்துள்ள நிலையில், நான்கு சக்கர வாகனங்களை வேளச்சேரி மேம்பாலத்தில் வரிசை கட்டி நிற்க வைத்து வருகின்றனர்.
டானா புயல் எதிரொலி; சென்னை, திருச்சி உள்ளிட்ட பல வழித்தடங்களில் 28 ரயில்கள் ரத்து - லிஸ்ட் இதோ!
Chennai Rains
ஆனால் எதிர்பார்த்ததை விட மழை கொஞ்சம் குறைவாகவே இருப்பது அவர்களுக்கு பெரிய ஆறுதலை தந்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது பெய்யும் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து வருகிறது. இந்த முறை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மட்டுமல்லாமல் கோவை, மதுரை, சிவகங்கை போன்ற பகுதிகளிலும் கன மழையும், அவ்வப்போது புயலும் வீசி வருகிறது. இந்த சூழலில் நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதால், அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் அடங்கும் என்றும் அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.
Coimbatore
ஆனால் கோயம்புத்தூரை தவிர பிற மாவட்டங்களில் இருந்து விடுப்பு குறித்த எந்தவித அறிவிப்பும் இன்னும் வரவில்லை. மேலும் கனமழை காரணமாக தமிழகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஓடும் சுமார் 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது. நாளை அக்டோபர் 23ஆம் தேதி, 24ஆம் தேதி மற்றும் 26 ஆம் தேதி தமிழகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செயல்பட்டவிருந்த 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
Tamil nadu rains
சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வாரம் தொடர்ச்சியாக தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள வடக்கு அந்தமான் பகுதிகளில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த தாழ்வு மண்டலமானது நாளை (அக்டோபர் 23) தீவிரமடைந்து புயலாக வலுபெற வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Pink Auto: பெண்களுக்கு ஆட்டோ வாங்க ஒரு லட்சம் ரூபாய் அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! வெளியான சூப்பர் அறிவிப்பு!