அதன்படி வண்டி எண் 22603, காரக்பூரில் இருந்து அக்டோபர் மாதம் 24ஆம் தேதி மதியம் 2 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வந்தடையும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. வண்டி எண் 12841 அக்டோபர் 24ஆம் தேதி மதியம் 3.20 மணிக்கு ஷாலிமரில் இருந்து புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் வந்து சேர வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. வண்டி எண் 12663 அக்டோபர் 24ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு ஹௌராவில் இருந்து புறப்பட்டு திருச்சிராப்பள்ளி வந்தடையும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என்று தென்னை ரயில்வே அறிவித்துள்ளது.