மாநாட்டிற்கு முன் விஜய்க்கு வந்த அதிர்ச்சி செய்தி.! தாங்க முடியாமல் கதறி அழுத புஸ்ஸி ஆனந்த்

First Published | Oct 22, 2024, 4:41 PM IST

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் மாரடைப்பால் காலமானார். விஜய் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அக்டோபர் 27ல் நடைபெறும் மாநாட்டிற்கு முன்னதாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Actor Vijay

தமிழக அரசியலில் விஜய்

தமிழகத்தில் திமுக- அதிமுகவிற்கு போட்டியாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை பதிவு செய்தார். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என அறிவித்தார். இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்து விட்டு இனி படத்தில் நடிக்க மாட்டேன் என கூறினார். இதனையடுத்து தனது கட்சியின் கொடி சின்னத்தை வெளியிட்டவர், பாடலையும் வெளியிட்டு திராவிட கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
 

மாநாட்டு பணி தீவிரம்

இதனையடுத்து தனது முதல் அரசியல் மாநாட்டிற்காக தமிழக முழுவதும் இடங்களை தேடிய விஜய், இறுதியாக விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறும் என அறிவித்தார். அக்டோபர் 27ஆம் தேதிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் மாநாட்டு பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கு பல லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வயதானவர்கள், கர்ப்பினி பெண்கள், சிறுவர்கள் மாநாட்டிற்கு வர வேண்டாம் என தவெக தலைவர் விஜய் அன்பாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Tap to resize

விஜய் கட்சி மாநில நிர்வாகி மரணம்

இந்தநிலையில் மாநாட்டு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் புதுவை மாநில செயலர் சரவணன் (47) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். கல்லூரியில் படிக்கும் காலம் தொட்டே நடிகர் விஜயின் தீவிர ரசிகரான சரவணன், தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு மிக நெருக்கமானவராக திகழ்ந்தார். இந்தநிலையில் மாநாட்டு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த சரவணன் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 
 

vijay

விஜய் இரங்கல்- புஸ்ஸி ஆனந்த் கதறல்

இந்த சம்பவம் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இன்று காலை சரவணனின் உடலை பார்த்த புஸ்ஸி ஆனந்த கதறி, கதறி அழுதார். இதனையடுத்து சரவணின் குடும்பத்தாரிடம் தவெக தலைவர் விஜய் தொலைபேசி மூலம் பேசி ஆறுதல் கூறினார். தொடர்ந்து  தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள செய்தியில்,

தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி திரு. சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

Latest Videos

click me!