மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்
தீபாவளி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாட தயாராகி வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊழியர்களுக்கு அடுத்தடுத்து குட் நியூஸ் வந்து கொண்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இதனால் கோடிக்கணக்கான ஊழியர்கள் பலன் அடையவுள்ளனர்.
இதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் 3 சதவிகித அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது. 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.