தீபாவளி விற்பனைக்காக இளம் தலைமுறை மகளிருக்கான ஆயத்த ஆடைகளான குர்த்தீஸ், கிராப் டாப், ஷார்ட்ஸ், ஜாக்கெட், ஸ்கர்ட்ஸ் உள்ளிட்ட ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 700 புதிய வடிவமைப்பில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், சேலம் மற்றும் கோவை பட்டுச் சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெய்யப்பட்ட பருத்தி சேலைகள், கைலிகள், மெத்தை விரிப்புகள், போர்வைகள், ஆடவருக்கான பல்வேறு வகையான சட்டைகள், வேட்டிகள், துண்டுகள், சுடிதார் ரகங்கள், வீட்டு உபயோக ரகங்கள் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஆகியவை புதிய வடிவமைப்பு மற்றும் வண்ணங்களில் உற்பத்தி செய்யப்பட்டு தீபாவளிக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டவுள்ளது