வெயிலின் ஆட்டம் ஆரம்பிச்சுடுச்சு! இனிமே குடை இல்லாமல் வெளியே போவாதீங்க! மழை குறித்து எதிர்பாராத ட்விஸ்ட்

Published : Feb 24, 2026, 02:41 PM IST

Tamilnadu Rain Update: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

PREV
15
சுட்டெரிக்கும் வெயில்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் தலைக்காட்டாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் முதல் முறையாக ஈரோட்டில் நேற்று 100 டிகிரியில் கொளுத்தியது. இதற்கு அடுத்ததாக கரூர் பரமத்தியில் 99.5 டிகிரி, மதுரை விமான நிலைய பகுதியில் 99.32 டிகிரி, சேலத்தில் 98.6 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது.

25
இன்று மழைக்கு வாய்ப்பு

தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

35
தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

அதேபோல் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் பிப்ரவரி 26 மற்றும் 27 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பிப்ரவரி 28

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். மேலும் மார்ச் 1ம் தேதி தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

45
சென்னை வானிலை அப்டேட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

55
மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக்கடல் பகுதிகள்

தென்கிழக்கு வங்கக்கடலின் இன்று அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மத்தியமேற்கு மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories