அக்கா அக்கானு சொல்லியே பக்கவாக ஓனரின் மனைவிக்கு ரூட் போட்டு மிக்ஸ் ஆன மிக்சர் மாஸ்டர்! இறுதியில் அதிர்ச்சி!

Published : Oct 03, 2025, 09:25 AM IST

TN Crime News: மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட இளைஞரை வேலை நீக்கம் செய்துள்ளார். ஆனாலும் தொடர்பு தொடர்ந்ததால், ஆத்திரமடைந்த கணவர் நண்பர்களுடன் சேர்ந்து அந்த இளைஞரை திருப்பத்தூரில் உள்ள அவரது வீட்டிற்கே சென்று கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். 

PREV
15
மிக்சர் மாஸ்டர்

திருநெல்வேலி மாவட்டம் சேர்ந்தவர் அல்போன்ஸ்(35). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கே.பி.அக்ராகாரம் பகுதியில் மிக்சர் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கம்பெனியில் மிக்சர்போடும் மாஸ்டராக கடந்த 4 ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த பவன்குமார்(19) மற்றும் இவரது தம்பி 17 வயது சிறுவன் ஆகிய இருவர் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் பவன்குமாருக்கும் ஒனர் அல்போன்சின் மனைவி சத்யா(30)வுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அவ்வப்போது இருவரும் தனிமையில் இருந்து வந்தனர்.

25
கள்ளக்காதல்

இந்த விவகாரம் நாளடைவில் கணவர் அல்போன்ஸ்க்கு தெரியவந்ததை அடுத்து நான்கு மாதங்களுக்கு முன்பு பவன்குமார் மற்றும் அவரது தம்பியை வேலையில் இருந்து நீக்கியுள்ளார். இதனையடுத்து இருவரும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தோட்டிகுட்டை கிராமத்தில் பாட்டி வீட்டில் தங்கினர். இருப்பினும் சத்யாவும், பவன்குமாரும் அடிக்கடி செல்போனில் பேசியது மட்டுமல்லாமல் தனிமையில் சந்தித்தும் வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்து ஆத்திரமடைந்த கணவர் அல்போன்ஸ் மனைவியை கண்டித்தது மட்டுமல்லாமல் தாக்கியதாக கூறப்படுகிறது.

35
இளைஞர் கொலை

இதுதொடர்பாக கணவர் மீது சத்யா கே.பி. அக்ரஹாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அல்போன்ஸ் மனைவியின் கள்ளக்காதலனான பவன்குமாரை போட்டுத்தள்ள திட்டமிட்டார். அதன்படி ஒருவழியாக அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்ற அல்போன்ஸ் நண்பர்களுடன் சேர்ந்து பவன்குமாரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து காரில் தப்பித்தனர்.

45
போலீஸ் கைது

பவன்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

55
4 பேர் கைது

இதுகுறித்து குரிசிலாப்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பெங்களூருவில் பதுங்கிய அல்போன்ஸ் மற்றும் அவரது நண்பர்களான சென்னை பெரம்பூரை சேர்ந்த பாக்யராஜ்(40), தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பொன்னையா(37), அழகு என்கிற கதிர்வேலன்(41) ஆகிய 4 பேரை கைது செய்து நீததிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் வீடு புகுந்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுதத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories