தமிழகத்தில் ரேஷன் கார்டு
தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ரேஷன் கார்டு மூலம் மானிய விலையில் உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசி, கோதுமை, சக்கரை, பாமாயில், பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரைக்கும் மொத்தமாக 39 மாவட்டங்கள் உள்ளன இதில் 34 ஆயிரத்து 793 நியாயவிலைக் கடைகளானது செயல் பட்டு வருகிறது.
இதில் குடும்ப அட்டைகள் என்று பார்க்கும் பொழுது 2 கோடியே 24 லட்சத்து 78 ஆயிரத்து 924 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 7 கோடியே 2 லட்சத்து 36 ஆயிரத்து 605 பேர் பயனாளிகளாக உள்ளனர். இவர்களுக்கு குறைந்த விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் சலுகைகளை பெற ரேஷன் கார்டு முக்கிய தேவையாக உள்ளது.
ஒரு லட்சம் பேருக்கு ஓகே ஆன ரேஷன் கார்டு
அந்த வகையில் கடந்த ஓராண்டு காலமாக புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது 3 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து 1 லட்சம் பேருக்கு புதிதாக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களில் ஒரு லட்சம் கார்டுகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக விண்ணப்பிப்பவர்களின் மனுக்கள் உடனடியாக பரிசீலனை செய்து ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் புதிய ரேஷன் கார்டு இல்லாதவர்கள் உடனடியாக இ சேவை மையத்திலையோ அல்லது வீட்டில் இருந்து கணிணி அல்லது மொபல் போன் மூலமாகவோ விண்ணப்பித்து புதிய ரேஷன் கார்டுகள் பெற்றுக்கொள்ளலாம். அந்த வகையில் புதிய ரேஷன் கார்டுகள் பெற ஆன்லைனில் விண்ணப்பம் செய்பவர்கள் முதலில் தங்களது மாவட்டம், வட்டம், கிராமம் உள்ளிட்ட தகவல்களை சரியாக வைத்துக்கொண்டு விண்ணப்பித்தால் வீட்டில் இருந்தே அடுத்த இரண்டு முதல் 5 நிமிடங்களில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய முடியும்,.
விண்ணப்பிப்பது எப்படி.?
உணவு பொருள் வாங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் தளத்தில் புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் இந்த https://www.tnpds.gov.in/ இணையதள பக்கத்திற்கு சென்றதும் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அதில், வலது பக்கத்தில் மின்னணு ஆட்டை சேவைகள் என்ற காலம் இருக்கும்.
புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க, மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை, மறுபரிசீலனை விண்ணப்பம் ஆகியவை தொடர்பான காலங்கள் இருக்கும். தற்போது புதிய மின்னு அட்டை விண்ணப்பிக் என்ற காலத்தை கிளிக் செய்ய வேண்டும். அடுத்த புதிய பக்கமானது திறக்கும், அதில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி.?
முதலாவதாக குடும்ப தலைவரின் பெயர் ஆங்கிலம் மட்டும் தமிழில் எழுத வேண்டும். தந்தை அல்லது கணவர் பெயரை பதிவு செய்ய வேண்டும். அடுத்த வரிகளில் வீட்டின் முகவரியை ஒன்றின் கீழ் ஒன்றாக ஆங்கிலம் மற்றும் தமிழ் பதிவு செய்ய வேண்டும். இதற்குக் கீழாக மாவட்டம் என கேட்கப்பட்டிருக்கும், அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் பெயர்களும் வரிசையாக இருக்கும்.
அதில் தாங்கள் வசிக்கும் மாவட்டம் என்ன என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து எந்த மண்டலம் என்ற காலம் இருக்கும் அந்த மண்டலத்தையும் கிளிக் செய்த பிறகு கிராமத்தையும் தேர்வு செய்ய வேண்டும். அடுத்ததாக அஞ்சல் குறியீட்டு எண்ணை பதிவு செய்த பிறகு மொபைல் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். அடுத்ததாக மின்னஞ்சல் அதாவது இமெயில் முகவரி இருந்தால் அதனையும் பதிவு செய்ய வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள் என்ன.?
இதற்குப் பின்பு யார் யார் குடும்பத்தில் உள்ளனர். குடும்பத்தின் உறுப்பினர்களின் விபரங்களையும் படிப்படியாக பதிவு செய்ய வேண்டும். அதில் பெயர், பாலினம், மாற்றுத்திறனாளியா.? பிறந்த தேதி, குடும்பத் தலைவருடன் மற்றவர்களுக்கு உள்ள உறவு முறை என்ன என பதிவு செய்ய வேண்டும். அதற்கு கீழே அட்டை தேர்வு என்ற காலம் இருக்கும். அதில் பண்டகம் இல்லாதஅட்டையா.? அரிசி அட்டையா.? சர்க்கரை அட்டையா அல்லது மற்ற அட்டையா என்பதனை குறிப்பிட வேண்டும்.
இதற்குப் பின்பாக தற்போது தங்கி இருக்கும் வீட்டின் குடியிருப்பு சான்று ஆவணத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். புதிய முகவரியில் ஆதார் அட்டை இருந்தால் அதனை பதிவேற்ற செய்யலாம். ஆதார் அட்டை வேறு இடம் என்றால் வீட்டின் குடியிருப்பதற்கான ஆதரமாக வீட்டின் வாடகை ஒப்பந்த பத்திரத்தை பதிவேற்றலாம்.
ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும்
அடுத்ததாக தங்களிடம் ஏற்கனவே எரிவாயு இணைப்பு உள்ள விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். கடைசியாக தாங்கள் கொடுத்த தகவல் அனைத்தும் உண்மை என்பதை தெரிவித்து கிளிக் செய்தால் அந்த புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் நிறைவு செய்யப்பட்டு அதிகாரிகளின் பரிசீலனைக்கு சரி சென்று விடும். இதனையடுத்து உணவுப்பொருள் வழங்கல் துறையின் உதவி ஆணையர் குடும்ப அட்டை தொடர்பான விண்ணப்பித்து பரிசீலனை செய்து உண்மையான தகவல் இருந்தால் குடும்ப அட்டை வழங்கப்படும். எனவே ஓராண்டுக்கு பிறகு புதிய ரேஷன் அட்டை வழங்கப்படும் நிலையில் இதனை பயன்படுத்திக்கொள்ள ஒரு சான்ஸ் கிடைத்துள்ளது.