இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய செயற்பொறியாளர் மற்றும் தனியார் நிறுவன ஒப்பந்ததாரர் இருவரும் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி திமுக கவுன்சிலர் ஸ்டாலின் மீது அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: Schools Reopen: பள்ளி மாணவர்களுக்கு முடிவடையும் காலாண்டு விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு!
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் வடக்கு பகுதி 144வது வட்டச் செயலாளரும் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினருமான ஏ.ஸ்டாலின் அவர்கள் கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.