தமிழக அரசின் வேலைவாய்ப்பு பயிற்சி
ஆண்டு தோறும் லட்சக்கணக்கானோர் படிப்பு முடித்து வேலை தேடி பல்வேறு ஊர்களுக்கும், மாநிலங்களுக்கும், ஏன் வெளிநாடுகளுக்கு கூட பயணம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு சார்பாக பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக அரசு பணிக்கு தேர்வு செய்தவற்காக நடைபெறும் தேர்வுகளில் இளைஞர்கள் வெற்றி பெற சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
மேலும் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் தனியார் துறை வேலையில் இணையும் வகையில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வாரந்தோறும் நடத்தி பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பிற்கு ஏற்பாடு செய்து வருகிறது. அடுத்தாக சொந்தமாக தொழில் செய்ய திட்டமிடுபவர்களுக்காக சுய தொழில் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.
யூடியூப் சேனல் தொடங்குவதற்கான பயிற்சி
அந்த வகையில் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தங்களது திறமைகளை வீடியோவாக பதிவு செய்து டியூப்பில் பதிவு செய்து வருகின்றனர். இதன் காரணமாக தற்போதும் பலரும் லட்சத்தில் சம்பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் யூடிப்பில் சேனல் தொடர்பாகவும், வீடியோ மற்றும் மார்க்கெட்டிங் செய்வது தொடர்பாக தமிழக அரசு சார்பாக பயிற்சி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் "யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல் தொடர்பான பயிற்சியானது வருகிற அக்டோபர் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் "சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல், வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல்,
யூடியூப்பில் மார்க்கெட்டிங் செய்வது எப்படி.?
சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் வலையமைப்பை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு - ஆன்லைன் மார்க்கெட்டிங் டொமைன் பெயர் & ஹோஸ்டிங் இணையதள வடிவமைப்பு நுட்பங்கள்,சைபர் குற்றம் பாலிசி மற்றும் விதிகள் ஆகிய தலைப்புகளின் கீழ் கற்றுத்தரப்படவுள்ளது.
எனவே இப் பயிற்சியில் நீங்கள் எவ்வாறு யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல் மற்றும் பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான நேரடி பயிற்சி வகுப்பின் மூலமாக கற்றுக் கொடுக்கப்பட இருப்பந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்வமுள்ளவர்கள் ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
பயிற்சியில் பங்குப் பெறும் ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளதாகவும் தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப் பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். முகவரி தொலைபேசி / கைப்பேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு அவசியம்
தமிழ் நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600032.
8668 100181/9841 336033 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம் எனவும் பயிற்சியின் முடிவுல் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.