உச்சத்தை தொட்ட தக்காளி விலை.! கோயம்பேட்டிலேயே ஒரு கிலோ இவ்வளவா.?

First Published Oct 6, 2024, 7:08 AM IST

தமிழகத்தில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மழை குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக வரத்து குறைந்து விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு கிலோ தக்காளி கடந்த் ஒரு வருடத்தில் இல்லாத வகையில் உச்சத்தை தொட்டுள்ளது. .

சமையலும் தக்காளியும்

சமையலுக்கு முக்கிய தேவையானது தக்காளியாகும், அந்த வகையில் தக்காளியையும் சமையலையும் பிரிக்க முடியாது. ரசம் வைப்பது முதல் பிரியாணி சமைப்பது வரை தக்காளி தேவையாகும். எனவே தக்காளியின் விலை உயர்ந்தால் இல்லத்தரசிகள் நிலை திண்டாட்டம் தான். இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குறைந்திருந்த தக்காளி விலையானது உச்சத்தை அடைந்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தக்காளியானது அதிகளவு விளைச்சல் செய்யப்படுகிறது. இருந்த போதும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகம் தக்காளி விளைச்சல் செய்வதில் 6வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தின் தக்காளி தேவையை பூர்த்தி செயவது கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களாகும். இங்கிருந்து தான் தமிழக்த்தில் பல்வேறு பகுதிகளுக்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தக்காளி வரத்து குறைந்தது

இங்கு தென் மேற்கு பருவ பருவமழை முடிவுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தக்காளி வரத்து பெரும் அளவில் தடை பட்டதாலும் தேவை அதிகரிப்பாலும் விலை உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் புரட்டாசி மாதம் என்பதாலும் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாகவும் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.  கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 200 டன் தக்காளி வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 800 டன்னாக குறைந்துள்ளது. இதன் காரணமாகவே விலையில் புதிய உச்சத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். கடந்த மாதம் ஒரு கிலோ தாக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

Latest Videos


ஒரு கிலோ தக்காளி விலை இவ்வளவா.?

இன்று ஒரு கிலோ கோயம்பேடு சந்தையில் முதல் ரக தக்காளி 89 முதல் 90 ரூபாய்க்கும், இரண்டாம் தர தக்காளி 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதுவே வெளி சந்தை மற்றும் சில்லரை மார்க்கெட்டில் ஒரு கிலோ 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இந்த விலை உயர்வானது இன்னும் ஒரு மாதம் வரை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே வரும் நாட்களில் கோயம்பேடு சந்தையிலேயே ஒரு கிலோ 100 ரூபாயை தாண்ட வாய்ப்பு இருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே தக்காளி விலை உயர்வின் காரணமாக 3 முதல் 5 கிலோ வரை வாங்கி செல்லும் பொதுமக்கள் தற்போது அரை கிலோ முதல் ஒரு கிலோ மட்டுமே வாங்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

Vegetables Price Koyembedu

காய்கறிகளின் விலை என்ன.?

இதனிடையே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 70 முதல் 80 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

vegetables

ஒரு கிலோ பீன்ஸ் விலை இவ்வளவா.?

பாகற்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ ரூ. 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 80ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 205 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

click me!