நாளை அக்டோபர் 6ம் தேதி தமிழகத்தின் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய, லேசானது முதல் அதிக கனத்த மழை வரை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இன்றும் சென்னையின் பல இடங்களிலும் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், உள்ளிட்ட பகுதிகளிலும் மாலை நேரத்தில் கன மழை வெளுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையின் அனேக இடங்களிலும் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, நாமக்கல், கரூர், மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், பல இடங்களில் அதிக கனத்த மழையும் பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.