TNPSC Group 2: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

First Published Oct 6, 2024, 11:12 AM IST

TNPSC Group 2: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களுக்கு வேலூர் மாவட்டத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளன. 

எப்படியாவது அரசு வேலைக்கு சென்றுவிட்டால் லைஃப் செட்டில்டு என்பதால் போட்டா போட்டிக்கொண்டு இளைஞர்கள் அரசு தேர்வை எழுதி வருகின்றனர். மத்திய அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் தேர்வும், தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப  டிஎன்பிஎஸ்சி எனப்படும்  தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு பணிக்கு ஆட்களை தேர்வு செய்யப்படுகிறது. 

இந்நிலையில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் தேர்வு நடத்தி நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணியில் 2,327 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 20ம் தேதி வெளியாகி ஜூலை 19 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த தேர்வுக்கு தமிழக முழுவதும் மொத்தமாக 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் செப்டம்பர் 14ம் டிஎன்பிஎஸ்சி குரூப் -2க்கான தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ காலிப் பணியிடங்களுக்கான முதன்மை தேர்விற்கு கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்பு கோவை மாவட்டத்தை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் தொடங்க உள்ளது.  

Latest Videos


vellore

இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் டிஎன்பிஎஸ்சி., டிஎன்எஸ்யுஆர்பி, மற்றும் டிஆர்பி உள்ளிட்ட தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதையும் படிங்க: TASMAC Shop: குடிமகன்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டாஸ்மாக் விவகாரத்தில் முக்கிய முடிவு!

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ ஆகியவற்றுக்கான முதல்நிலை தேர்வு கடந்த மாதம் 14-ம் தேதி நடந்தது. இந்நிலையில் குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக சிறந்த பயிற்றுனர்களை கொண்டு அதிகளவிலான பயிற்சி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும். கூடுதல் தகவல்களை வேலூரை அடுத்த மேல்மொணவூரில் உள்ள வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ காலிப் பணியிடங்களுக்கான முதன்மை தேர்விற்கு கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்பு கோவை மாவட்டத்தில் விரைவில் தொடங்க உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிக்கை வெளியிட்டிருந்தார். இப்பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வானது செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு முதன்மைத் தேர்வானது பிப்ரவரி மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக்டோபர் 10-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: TN Government Employee: தமிழக அரசின் புதிய உத்தரவு! முடியவே முடியாது! எதிர்க்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!

முதல்நிலைத் தேர்வு எழுதிய மாணவ -மாணவிகள் பயன்பெறும் வகையில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக சிறந்த பயிற்றுனர்களைக் கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில்  இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மையத்தில் ஸ்மார்ட் போர்டு, இலவச ‘வைஃபை’ வசதி, அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி ஆகியவை உள்ளது. 

வாரத் தேர்வுகள் முழு மாதிரி தேர்வுகள் போன்றவற்றுடன் நடத்தப்பட உள்ளது. https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து இலவசமாக பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு studvcirclecbe@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 93615 76081 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பெரம்பலூர், ராணிப்போட்டை மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

click me!