வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது எப்படி.? நடந்தது என்ன.? 300 வீடுகள், பாலம் மாயம்- வெளியான ஷாக் தகவல்

First Published Jul 30, 2024, 9:32 AM IST

வயநாட்டில் 3 இடங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 300க்கும் மேற்பட்ட வீடுகள், பாலம் போன்றவை நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்துள்ளது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது. 
 

Wayanad landslide

காட்டாற்று வெள்ளம்

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வடக்கு பகுதியில் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் வானிலை மையமும் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ரெட் அலர்ட் வெளியிட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் உள்ள மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.
 

kerala

நள்ளிரவில் ஏற்பட்ட கொடூரம்

குறிப்பாக வயநாடு, மலப்புரம், கன்னூர் போன்ற இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக நேற்று  2 மணியளவில் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவானது சூரல்மலை பகுதியில் உள்ள பாலத்தை அடித்து கொண்டு சென்றுள்ளது. மேலும் 300க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகியுள்ளது. கன மழை மற்றும் இருள் சூழ்ந்த நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற நிலச்சரிவால் மக்களால் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
 

Latest Videos


wayanad landslide

300 வீடுகள் மாயம்

முழு மலையே நிலச்சரிவால் சரிந்ததாகவும், இதனால் பல வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 20பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 100க்கும் மேற்பட்டவர்கள் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனையடுத்து மீட்பு பணிக்காக சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். ஆனால் மிகப்பெரிய நிலச்சரிவால் கல்பட்டா, மேப்பாடி போன்ற பகுதிகளுக்கு  மீட்பு படைகள் செல்ல முடியவில்லை.

Wayanad Landslide | தொடர் மழையால் வயநாட்டில் நிலச்சரிவு! 20 பேர் பலி
 

landslide wayanad

கனமழையால் மீட்பு பணி சிக்கல்

பாலமும் முற்றிலுமாக அடித்து செல்லப்பட்டுள்ளதால்மீட்பு படையினரால் அந்த பகுதியை நெருங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் ஏற்பட்ட 3 நிலச்சரிவால் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறது. தற்போது வயநாடு பகுதியில் கன மழை பெய்து வருவதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பல்வேறு இடங்களில் இருந்து மீட்பு பணிக்கு அனுப்பப்பட்ட ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

landslide wayanad

வயநாடு விரையும் அமைச்சர்கள்

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் மீட்பு பணியை தீவிரப்படுத்து கேரள அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் வயநாடு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!