TASMAC SHOP : இந்த 2 நாட்கள் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை.! எப்போ தெரியுமா.? வெளியாகியுள்ள தகவல்

First Published | Sep 4, 2024, 1:27 PM IST

TASMAC SHOP : தமிழகத்தில் மது விற்பனை அதிகரித்து வருவதையும், அதனால் ஏற்படும் சமூக பாதிப்புகளையும் இந்த கட்டுரை ஆராய்கிறது. டாஸ்மாக் விற்பனையில் புதிய திட்டங்கள், வீட்டு டெலிவரி சாத்தியக்கூறுகள் மற்றும் விடுமுறை நாட்கள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

இளைஞர்களின் மது மோகம்

தமிழகத்தில் மதுபான விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பு குடித்துவிட்டு வந்தால் ஊரை விட்டு ஒதுக்கிவைத்த காலம் போய் குடித்தால் தான் தற்போது பேஷன் மற்றும் மரியாதையாகிவிட்டது. குடிப்பதையே ஸ்டைலாக மாற்றிவிட்டனர். கம்பெனி மீட்டிங்கில் குடிக்கவில்லையென்றால் அந்த நபரை தனியாக ஒதுக்கி வைக்கும் நிலைதான் தற்போது உள்ளது. குறிப்பாக ஆண்களுக்கு போட்டியாக பெண்களின் கைகளிலும் மதுபானம் அதிகளவு காட்சியளிக்கிறது. இரவு நேர விடுதிகளில் ஆயிரக்கணக்கான பணம் கொடுத்து என்ஜாய் பன்னும் இளைஞர் மதுவிற்கு அடிமையாகி வருகின்றனர். ஜாலிக்காக மது குடிப்பது அறிமுகம் ஆகி பின்னர் மது இல்லாமல் வாழ முடியாத நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள்

மதுவுக்காக தனிநபர் செய்யும் செலவு அடிப்படையில் ஆந்திரா முதல் இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் மது குடிப்பவர்கள் சராசரியாக ரூ.620 செலவு செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் சராசரியாக ரூ.330 செலவு செய்கிறார்கள் என புள்ளி விவரம் கூறுகிறது. தமிழகத்தை பொறுத்த வரை நான்கு ஆயிரம் டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள் உள்ளது. இந்த கடைகளானது மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை செயல்படுகிறது. 

ரூ.1,734 கோடிப்பே.. சினிமாவை மிஞ்சிய குடிமகன்கள்.. கடந்த ஆண்டை விட அதிகரித்த டாஸ்மாக் வருமானம்..

Tap to resize

டாஸ்மாக் மது விற்பனை

நாளொன்றுக்கு சுமார் 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதுவே விஷேச நாட்கள் என்றால் ஒரு நாள் வருமானம் 150 கோடியை தொடும் நிலைக்கு தள்ளப்படுகிறது. கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில் 44 ஆயிரத்து 121 கோடியே 13 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டது. இது பல மடங்கு அதிகரித்து , இந்த நடப்பு ஆண்டு ஆயிரத்து 734 கோடியே 54 லட்சம் ரூபாய் அளவுக்கு கூடுதலாக மது விற்கப்பட்டுள்ளதாக தமிழக அரசே தெரிவித்துள்ளது.
 

மதுபானம் டோர் டெலிவரி

இன்றைய இளைஞர்களை கவர பல திட்டங்களையும் மதுவிலக்கு துறை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உயர்ரக மது அருந்தும் வகையில் எலைட் கடைகளும் தமிழகத்தில் முக்கிய நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. தனியாருக்கு போட்டியாக அரசால் நடத்தப்படும் இந்த கடையில் வெளிநாட்டு மதுவகைகளும் கிடைக்கும் நிலை உள்ளது. இது மட்டுமில்லாமல் ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் மதுபானங்களை டெலிவரி செய்யும் நடைமுறை இருக்கும் நிலையில் அதனை மற்ற மாநிலங்களிலும் விரிவுப்படுத்த திட்டமானது வகுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில்  டெல்லி, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், தமிழ்நாடு, கோவா, கேரளா போன்ற மாநிலங்கள் வீட்டிற்கே நேரடியாக மதுபானங்களை டெலிவரி செய்வதை அனுமதிக்கும் திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

டெட்ரா பாக்கெட் விற்பனை

அடுத்ததாக கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்தும் வகையில் டாஸ்மாக கடைகளில் 90 மிலி மதுபான டெட்ரா பாக்கெட் விற்பனை செய்ய திட்டமானது வகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் குறைந்த அளவாக 180 மிலி மது மட்டுமே கிடைப்பதாகவும், அதன் குறைந்தபட்ச விலை ரூ.140 என்பதால், அவ்வளவு பணம் கொடுத்து டாஸ்மாக் மதுவை வாங்கிக் குடிக்க முடியாதவர்களுக்கு இந்த 90 மிலி பயனுள்ளதாக ஆலோசிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் தமிழக அரசு பின்வாங்கியது.

2 நாட்களுக்கு மதுக்கடைகள் விடுமுறை

இந்தநிலையில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி என 8 நாட்கள் விடுமுறை அளிக்கும் அந்த வகையில் இந்த மாதம் ஒரு நாளும் அடுத்த மாதம் ஒரு நாளும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவுள்ளது.

மதுக்கடைகள் திறந்தால் நடவடிக்கை

அதன் படி மிலாது நபி விழா வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படவுள்ளது. அந்த நாளையொட்டி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது. இதே போல அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினமும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவுள்ளது. தமிழக அரசு உத்தரவிட்டுள்ள இந்த நாட்களில் மதுபான கடைகளை திறந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கைப்பட்டுள்ளது. 
 

Latest Videos

click me!