Private College Student: பொத்தேரி தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை! என்ன காரணம்? வெளியான அதிர்ச்சி தகவல்!

First Published | Sep 4, 2024, 12:40 PM IST

Private College Student Suicide: போதைப்பொருள் தொடர்பான சோதனையில் சிக்கிய ஒரு தனியார் கல்லூரி மாணவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

Drugs

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த பொத்தேரி பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது காரில் பின் இருக்கைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சர்வதே கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. 

Private College Student

இதனிடையே தாம்பரம் காவல் ஆணையரகத்தை சேர்ந்த 1000 போலீசார் பொத்தேரி பகுதிகள் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருக்கும் 500க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த மாதம் 31ம் தேதி அதிகாலை அதிரடி சோதனை நடத்தினர். இதில் போதை சாக்லேட்டுகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு மாணவர்கள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், ஒரு மாணவி உள்பட 11 கல்லூரி மாணவர்களை செங்கல்பட்டு நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித்தது.

இதையும் படிங்க: School Teacher: லீவு விஷயத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு! பள்ளிக் கல்வித்துறை அதிரடி!

Tap to resize

College Student Suicide

இந்நிலையில் போலீசார் நடத்திய கஞ்சா ரெய்டில் சிக்கிய தனியார் கல்லூரி மாணவர் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

Police investigation

அதில், ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த கொண்டா சீனுவாச நிக்கில், செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பி.டெக் சி.எஸ்.சி இறுதியாண்டு பயின்று வந்தார். கடந்த 31ம் தேதி அதிகாலை பொத்தேரி பகுதியில் மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ஏராளமான கஞ்சா போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: Private College Student: பொத்தேரி தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை! என்ன காரணம்? வெளியான அதிர்ச்சி தகவல்!

Private College Management

இது தொடர்பாக கொண்டா சீனுவாச நிக்கில் உள்ளிட்ட 21 பேரை கைது செய்த போலீசார் கல்லூரி மாணவர்களை  மட்டும் நீதிமன்றம் சொந்த ஜாமீனில் அவர்களை விடுவித்தது. இதனிடையே, போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தனியார் கல்லூரி நிர்வாகம் கொண்டா சீனுவாச நிக்கிலின் பெற்றோரை நேரில் வரவழைத்து மகனின் நடவடிக்கை தொடர்பாக கூறி எச்சரித்துள்ளனர். 

Depression

இதனால் பெற்றோருக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாக நினைத்து மன உளைச்சலில் இருந்து வந்த சீனுவாச நிக்கில் நேற்றிரவு தான் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest Videos

click me!