ஒரே நிமிடத்தில் ஈசியா ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தலாம்.! எப்படி தெரியுமா.? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

First Published | Sep 4, 2024, 12:12 PM IST

தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் வேளையில், மின்சார வாரியம் மின் கட்டணம் செலுத்துவதை எளிதாக்க புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் எளிதாக மின் கட்டணம் செலுத்த முடியும்.

நவீன காலத்தில் கைக்குள் உலகம்

நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கைக்குள் உலகத்தை கொண்டு வரும் நிலை தற்போது உருவாகியுள்ளது. இருந்த இடத்தில் இருந்து உலகில் எந்த இடத்திற்கும் பணம் அனுப்ப முடியும், குக்கிராமங்களில் இருந்து கூட வெளிநாடுகளில் பொருட்களை வாங்க முடியும், உலகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை நேரலையாக இருக்கும் இடத்தில் இருந்து பார்க்க முடியும். இந்த தொழில் நுட்ப வளர்ச்சியால் தினந்தோறும் மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. விமானங்களில் இருந்து கரிவேப்பிலை வாங்குவது வரை நொடி நிமிடத்தில் முடித்து விட இன்றைய இனையதளம் பெரிதும் உதவியாக உள்ளது.
 

அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்

அதே நேரத்தில் இணையதளத்தை தவறான முறையில் இயக்கி மோசடி சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொபைல் போனில் வரும் ஒரு லிங்கை கிளிக் செய்தால் போதும் உடனடியாக வங்கி கணக்கில் இருந்து பணம் முழுவதுமாக சுருட்டப்பட்டு விடும். இந்த சைபர் கிரைம் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதி தான் மின் கட்டணம், தமிழகத்தின் மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சமாக உள்ளது. இவர்களை ஏமாற்ற புது டெக்னிக்கை மோசடி கும்பல் மேற்கொண்டு வருகிறது.  

மின் கட்டணத்தை இந்த லிங்கில் உடனடியாக செலுத்துங்கள் இல்லையென்றால் மின்சாரம் துண்டிக்கப்படும் என மெசஜ் மூலம் மக்களை எச்சரித்து பணத்தை பிடுங்கப்படுகிறது. இதனால் தமிழ்நாடு மின்சார வாரியம் இது போன்ற மெசேஜ்களை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
 

Tap to resize

காத்திருக்க வேண்டிய அவசியமில்லை

இதனிடையே மின் கட்டணம் செலுத்த அலுவலகத்திற்கு ஒரு நாளோ அரை நாளோ விடுமுறை எடுத்து கால் கடுக்க காத்திருக்க வேண்டிய காலம் மலையேறிவிட்டது. ஒரு நொடியில் மின்கட்டணம் கட்ட இணையதளத்தை மின்சார வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன் மூலம் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் மக்கள் எளிய முறையில் மின் கட்டணம் செலுத்தி வருகிறார்கள்.

மேலும் கடந்த மாதம் புது நடைமுறையை மின்சார வாரியம் அறிமுகம் செய்தது. அதன் படி 5ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்துபவர்கள் இனி நேரடியாக மின்சார வாரிய அலுவலகத்திற்கு சென்று செலுத்த முடியாது என்றும் டிஜிட்டல் முறையில் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும் என தெரிவித்திருந்தது.

மின் கட்டணம் செலுத்த இணையதளம்

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை செலுத்த   முதலில் TANGEDCO-வின் பிரத்தியேக இணையதளமான என்ற இந்த முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு TANGEDCO இணையதளத்தின் முகப்பு பக்கத்தில்  ஆன்லைன் சர்வீசஸ் கிளிக் செய்து தேர்வு செய்ய வேண்டும். இதனையடுத்து ஆன்லைன் சர்வீசஸ்-ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள 5 விருப்பங்களில் ஆன்லைன் பில் பேமென்ட் என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதனையடுத்து ஆன்லைன் பேமென்ட் கிளி செய்தவுடன் வேறு ஒரு ஸ்கிரீன் தோன்றும். நீங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள யூசர் ஐடி  மற்றும் பாஸ்வேர்ட் பதிவு செய்து கிளிக் செய்ய வேண்டும்.  அதே நேரத்தில் பதிவு  செய்யாமலேயே குவிக் பே மூலமும் எளிமையாக மின் கட்டணத்தை செலுத்தலாம் 

புதிய செயலி அறிமுகம்

இந்த குவிக் பே மூலம் பணம் செலுத்த அங்குள்ள பொத்தானை அழுத்ததுவதன் மூலம் மின்கட்டணத்திற்கான வாடிக்கையாளர் எண்ணை பதிவு செய்து மின் கட்டணத்திற்கான பணத்தை பதிவு செய்யலாம். ஆன்லைனில் பணமானது கிரெடிட் கார்ட், டெபிட் கார்டு. நெட் பேங்கில் மூலம் பணம் செலுத்தலாம்.

இந்தநிலையில் இணையதளத்தின் மூலம் மின் கட்டணம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் மேலும் மின்கட்டணம் செலுத்துவதை எளிமையாக்கும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் TANGEDCO செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் எளிமையாக மின் கட்டணம் செலுத்த இயலும். 

பெண்களுக்கான 5 சிறந்த அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள்.. பணத்துக்கு அரசு கியாரண்டி!

பணம் கட்டுவது எப்படி.?

மொபைல் போனில் உள்ள பிலே ஸ்டோரில்  Android 👉 play.google.com/store/apps/det…  iOS 👉 apps.apple.com/in/app/tangedc… பதிவு செய்வதன் மூலம் அந்த செயலி பதிவிறக்கம் செய்யப்படும். இதனையடுத்து அந்த செயலியில் நமது மொபைல் எண்ணை பதிவு செய்யவேண்டும். அதில் வரும் ஓடிபி பதிவு செய்யப்பட்டவுடன் அடுத்த பக்கம் செல்லும்.

அங்கு நமது ரகசிய பாஸ்வேர்ட் பதிவு செய்யப்பட வேண்டும். நமது பாஸ்வேர்டு உறுதி செய்யப்பட்ட பின்னர். குயிக் பே, மை பில்ஸ், மை கன்சூயூமர்ஸ், பில் கால்குலேட்டர். பண பரிவர்த்தனை உள்ள தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.  
 

ஒரே நிமிடத்தில் மின் கட்டணம்

இதில் குவிக் பே என்பதை கிளிக் செய்து நமது மின் இணைப்பு எண்ணை பதிவு செய்திட வேண்டும். இதனையடுத்து செக் என்கிற பட்டனை கிளிக் செய்வதன் மூலம் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என காட்டும். அங்கு யுபிஐ மூலம் மின் கட்டணத்தை செலுத்திக்கொள்ளலாம். இந்த பணப்பரிவர்த்தனை முடிந்தவுடன் மின்கட்டணம் செலுத்தப்பட்ட ரசீதையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இந்த பில்லை வாட்ஸ்ஆப் மூலமாகவும் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!