தளபதியின் த.வெ.க மாநாடு.. வருகை தருகிறார் ராகுல் காந்தி? கொளுத்திப்போடும் நெட்டிசன்ஸ்!

Ansgar R |  
Published : Sep 03, 2024, 09:50 PM IST

Vijay TVK : தளபதி விஜயின் த.வெ.க மாநாடு வருகின்ற செப்டம்பர் மாத இறுதியில் விக்ரவாண்டியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
14
தளபதியின் த.வெ.க மாநாடு.. வருகை தருகிறார் ராகுல் காந்தி? கொளுத்திப்போடும் நெட்டிசன்ஸ்!
GOAT Movie

தளபதி விஜய் இப்போது பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து நான்கு சிங்கிள் பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக அந்த பட குழுவினர் "கோட்" திரைப்படம் குறித்து வெளியிடும் பல தகவல்கள், ரசிகர்களின் மத்தியில் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

வருகின்ற செப்டம்பர் மாதம் 5ம் தேதி இந்த திரைப்படம் உலக அளவில் வெளியாக உள்ள நிலையில், அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது விஜய் ரசிகர்களை குஷியின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. இந்த படத்தில் முன்னணி நடிகர் நடிகர்கள் பிரபு தேவா, பிரஷாந்த், லைலா, சினேகா, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதுமட்டுமல்ல, வில்லனா மூத்த நடிகர் மோகன் கோட் படத்தில் கலக்கியுள்ளார். 

இதுதவிர Surpriseசாக, பல டாப் நடிகர், நடிகைகள் கேமியோ கதாபாத்திரங்கள் இந்த கோட் படத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. இந்த படம் குறித்து பேசும்போது, தளபதிக்கு பிரியாவிடை கொடுக்கும் ஒரு படமாக கோட் அமையும் என்று கூறியுள்ளார் இந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு.

வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த நிவின் பாலி! அதிரடி வழக்கு பதிவு!

24
Director H Vinoth

தளபதி 69

தளபதி அரசியலுக்கு நுழைவதற்கு முன்பாக அவர் நடிக்கவுள்ள கடைசி படம் தான் அவரது 69 படம். இப்போதைக்கு கிடைத்துள்ள தகவலின்படி, அந்த படத்தை பிரபல இயக்குனர் H வினோத் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் நடிகர் கமல்ஹாசனுக்கு எழுதிய, அரசியல் சார்ந்த ஒரு கதையை தான் இப்பொது அவர் தளபதியை வைத்து எடுக்கவுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. ஆனால் இதுவரை விஜயின் 69வது படம் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. 

ஏற்கனவே நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய மூன்று படங்களை அஜித்தை வைத்து மெகா ஹிட் வெற்றிகொடுத்தவர் வினோத். ஒருவேளை அவர் தளபதியின் 69வது படத்தை இயக்கினால், அது அவருக்கு விஜயோடு இணையும் முதல் படமாகவும், தளபதிக்கு அவர் திரைப்பயணத்தின் கடைசி படமாகவும் அது அமையும்.

34
Vijay TVK Flag

தளபதி விஜய்    

தமிழ் திரை உலகில் கடந்த 35 ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். ஒரு திரைப்படத்திற்கு சுமார் 150 முதல் 200 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெரும் டாப் நடிகர்களில் அவரும் ஒருவர். பொதுவாக சினிமாவில் வாய்ப்புகளும், புகழும் குறையும் நேரத்தில் தான் அரசியலை நாடி நடிகர், நடிகைகள் செல்வார்கள் என்ற ஒரு கருத்து இருந்து வருகிறது. ஆனால் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக திகழ்ந்துவரும் இந்த நேரத்தில், தன்னுடைய முழு நேர அரசியல் பணிக்காக திரை வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் தளபதி விஜய்.

இந்த ஆண்டு துவக்கத்தில் தனது தமிழக வெற்றிக்கழக கட்சி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்ட பொழுது, எந்த அளவிற்கு அவருடைய ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்களோ, அதே அளவிற்கு அவர் திரைப்படங்களில் இருந்து விலகப் போவதாக அறிவித்த பொழுது, பெரிய சோகத்தையும் அனுபவித்தனர். இருப்பினும் ரசிகர்கள் என்கின்ற ஒரு வட்டத்திலிருந்து நீங்கி, இப்போது தமிழக மக்களுக்காக அவர் உழைக்க உள்ளார் என்பது அவரது ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷத்தை அளித்திருக்கிறது.

44
rahul gandhi

ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொடி மற்றும் கட்சி பாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அக்கட்சியின் முதல் மாநாடு வருகின்ற செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்காக தமிழக அரசிடம் கோரிக்கை கடிதமும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல அரசு தரப்பில் இருந்து 21 கேள்விகள் கொண்ட ஒரு பட்டியலும் தமிழக வெற்றிக்கழக கட்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டியில் இந்த கட்சி மாநாடு நடக்கும் நிலையில், இதில் யார் யாரெல்லாம் பங்கேற்க போகிறார்கள் என்ற யுகங்கள் இப்போதே தொடங்கிவிட்டது. அண்மைக்காலமாக விஜயின் கட்சி தன்னோடு இணைந்தால் தனக்கு மகிழ்ச்சி என்று பேசி வரும் சீமான் உள்பட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரை பலரும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக அவ்வப்போது இணையத்தில் நெட்டிசன்கள் புரலிகளை கிளப்பிவிட்டு வருகின்றனர். இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் எதுவுமே அக்கட்சியின் சார்பாக வெளியிடப்படவில்லை. 

ஆனால் குறிப்பாக ராகுல் காந்தி வரப்போகிறார் என்று ஏன் வீண் வதந்திகள் கிளம்பியது? அப்படி என்றால் விஜயின் அரசியல் களம் எதை நோக்கி நகரும் என்ற ஒரு யோசனையும் எழுந்துள்ளது. 

நான் அந்த மாதிரி பார்ட்டி வச்சதில்ல.. கடுப்பான பிரபல நடிகை - சுசித்ரா மீது பாய்ந்த வழக்கு!

Read more Photos on
click me!

Recommended Stories