விஜய்யின் அரசியல் பிரவேசம் - வாடுமா இரட்டை இல? திமுக கதி என்ன? - ரவீந்திரன் துரைசாமி பதில்!

Published : Sep 03, 2024, 09:06 PM IST

நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் அரசியல் வருகையால் நிகழப்போகும் மாற்றங்கள் குறித்து விளக்கியுள்ளார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.  

PREV
14
விஜய்யின் அரசியல் பிரவேசம் - வாடுமா இரட்டை இல? திமுக கதி என்ன? - ரவீந்திரன் துரைசாமி பதில்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் நடக்கவுள்ளது. இப்போதே அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பணிகளை முடுக்கி விட்டுள்ளன. தமிழக அரசியலில் புது வரவாக இணைந்து இருக்கும் நடிகர் விஜய் அசுர வளர்ச்சியை கண்டு வருகிறார். கட்சிப் பெயரை அறிவித்ததுடன், தொடர்ச்சியாக கட்சிக் கொடி என அறிவித்து, மாநாட்டுக்கும் தேதியும் இடமும் குறித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய்யின் அரசியல் கட்சி வளர்ச்சி மற்றும் அவரது கட்சிப் பணிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, ''கட்சியின் பலம் நிரூபிக்காத விஜய் பற்றி பேசுபவர்கள் திமுக எதிர்ப்பாளர்களான தமிழருவி மணியன், பழ கருப்பையா மற்றும் சுமந்து சி ராமன் சுந்தரராமன் போன்றவர்கள் மட்டுமே.

24

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், தவெக விஜய் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினால், அது திமுக எதிர்ப்பு வாக்குகளையே பாதிக்கும். எனவே இது திமுகவிற்கு லாபம்தான். அதைத்தான் திமுக-விஜய் எதிரி என 2011ம் ஆண்டு முதல் திமுக கட்சியினர் தெளிவாக பரப்பி வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 2021-ல் தவெக தலைவர் விஜய்யை கிண்டலடித்து பிரச்சாரம் செய்தே 6.8% வாக்கு சதவீதம் எடுத்தார். 2024ல் விஜய் மக்களவைத் தேர்தலில் போட்டியிடாததால் சீமான் வேறு வழியின்றி தன் கட்சி சின்னமான மைக் படத்தை வைத்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதன் மூலமாக சீமான் 1.4% வாக்கு வங்கி உயர்ந்தது.

34

ஆனால் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் சுமார் 47% கிறிஸ்தவர்களின் வாக்கு, விஜய்யை எதிர்த்து பேசியதற்காக சீமானுக்கு 2021ல் கொடுத்த வாக்கை விட 2024ல் குறைவுதான். இந்தப் போக்கு 2026-லும் கிறிஸ்தவர்கள் வாக்கு திமுக அணிக்குத்தான் என்பதை காட்டுகிறது. தூத்துக்குடியில் 90% கிறிஸ்தவ நாடார்களின் வாக்கு திமுகவின் கனிமொழிக்கு சென்றுள்ளது. அப்படி எனில் விஜய்யின் அரசியல் வருகையால் இரட்டை இலைக்கு தான் பாதிப்பு. உதய சூரியனுக்கு அல்ல.

சீமான் எடுத்த 1.1% வாக்கு வங்கி அதிமுகவின் இரட்டை இலையை பாதித்தது. கமல்ஹாசன் எடுத்த 3.7% வாக்கு வங்கி இரட்டை இலையை மேலும் பதம் பார்த்தது. விஜய்யுடன் சீமானை ஒப்பிடும் போது அது சீமானுக்கு ஒரு விளம்பர பிரச்சாரமாகவே அமையும்.
 

44
ADMK DMK

இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடாத விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தன் பலத்தை நிரூபிக்க முயலும் போது, அது அதிமுக எடப்பாடி பழனிசாமியை ஓரளவு பாதிக்க வாய்ப்புள்ளது. ஒரு வேளை 2024 மக்களவைத் தேல்தலில் விஜய் போட்டியிட்டிருந்தால் அதிமுக-வை சற்று அதிகமாக பாதித்து இருக்கும்.

2024-ல் எடப்பாடி பழனிசாமி ஓரளவிற்கு களநிலவரத்தை அறிந்துகொண்டுள்ளதால் வரும் 2026ம் தேர்தலில் பாதிப்பு சற்று குறைவாகவே இருக்கும்'' என்கிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.

விரிசல் ; திமுகவிற்கு பயம் காட்டும் கூட்டணி கட்சிகள்.! 2026 தேர்தலுக்கு பல்டி அடிக்க போவது யார்.?
 

Read more Photos on
click me!

Recommended Stories