பெண்களே பொறாமைப்படும் பேரழகு; திண்டுக்கல்லில் ஒய்யார நடைபோட்ட திருநங்கைகள்

Published : Sep 01, 2024, 11:41 PM IST

திண்டுக்கல்லில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

PREV
14
பெண்களே பொறாமைப்படும் பேரழகு; திண்டுக்கல்லில் ஒய்யார நடைபோட்ட திருநங்கைகள்
Trans Queen 2024

திண்டுக்கல் தனியார் விடுதியில் கோல்டன் லோட்டஸ் பவுண்டேஷன் அன்பே கடவுள் அறக்கட்டளை சார்பில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர், மதுரை, கரூர், திருச்சி ஆகிய ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கைகள் 15 பேர் கலந்து கொண்டனர். 

24
Trans Queen 2024

நடையழகு, உடை அழகு, முக பாவனை  ஆகியவற்றின் அடிப்படையில் முதல் மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் தேனியை சேர்ந்த ஹேமா முதல் பரிசு பெற்று மிஸ் திண்டுக்கல் டிரான்ஸ் குயின் 2024 பட்டம் பெற்றார். 

34
Trans Queen 2024

இரண்டாம் இடத்தை தேனியைச் சேர்ந்த சுருதி, மூன்றாம் இடத்தை தேனியைச் சேர்ந்த தீக்ஷனா ஆகியோர் பிடித்தனர் இவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு தலையில் கிரீடம் அனிவிக்கப்பட்டது.

44
Trans Queen 2024

திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கையர் மற்றும் பலர் கலந்து கொண்டு போட்டிகளை  கண்டு கலித்தனர். மேலும் போட்டிகளை உற்சாகப்படுத்தும் வகையில் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Read more Photos on
click me!

Recommended Stories