கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்

First Published Jun 28, 2024, 5:57 PM IST

பழனி அருகே சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக கோவில் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் அறுசுவையுடன் கூடிய அன்னதானம் வழங்கி அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே ஆயக்குடியில் உள்ள பட்டாளத்தம்மன்  திருக்கோயிலில் ஆனி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று அருள்மிகு பட்டாளம்மன் திருக்கோவில் பக்தர்களுக்கு ஆயக்குடி காயிதே மில்லத் சிறுபான்மை சமூக சேவை அமைப்பின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. 

முன்னதாக திருக்கோயிலுக்கு வருகைதந்த காயிதே மில்லத் சிறுபான்மை சமூக சேவை அமைப்பின் நிறுவனர் அஜ்மத்அலி தலைமையிலான இஸ்லாமியர்களுக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.   

அம்மனுக்கு சிறப்பு பூஜை நிறைவுபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இஸ்லாமியர்கள் அன்னதானம் செய்ய, முன்னுற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னதான உணவு அருந்தினர். சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் இந்து சமய கோயில் திருவிழாவில் இஸ்லாமியர்கள் பங்கேற்று அன்னதானம் வழங்கியது வரவேற்பை பெற்றது. 

Latest Videos

click me!