Holiday for TASMAC and meat shops : தமிழகத்தில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகளின் மூலம் நாள்தோறும் சுமார் 100 கோடி ரூபாய்க்கும், தீபாவளி, பொங்கல் போன்ற விஷேச நாட்களில் 150 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டப்படுகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளில் கிடைக்கப்பெறும் வருமானத்தின் மூலம் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறது. எனவே தமிழக அரசுக்கு நிதியை அள்ளிக்கொடுக்கும் அட்ஷய பாத்திரமாக டாஸ்மாக் கடைகள் உள்ளது.
tasmac
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
இந்த கடைகளுக்கு தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்ற நாட்களில் விடுமுறை அளிக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக ஒரு வருடத்தில் 8 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் விடுமுறை விடப்படுகிறது. இதன் படி, திருவள்ளுவர் தினம், மிலாடு நபி, குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் மட்டுமே கண்டிப்பாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.
இந்த நிலையில் வருகிற 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது. இதே போல மகாவீர் ஜெயந்தி தினத்தில் இறைச்சி கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இறைச்சி கடைகளுக்கும் விடுமுறை
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும் அரசு உத்தரவின்படி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுளது. இதன் படி பெருநகர மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூர் வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்களும் வருகின்ற 10.04.2025 (வியாழக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.
மது, இறைச்சிப்பிரியர்களுக்கு ஷாக்
ஆகவே இறைச்சிக் கூட வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதே போல தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் இறைச்சிக்கடைகளை மூட அந்த அந்த பகுதியில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் வருகிற வியாழக்கிழமை இறைச்சு கடைகள் மட்டுமல்ல மதுபானக்கடைகளும் மூடப்படுவதால் இறைச்சி பிரியர்களும், மது பிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.