Published : Apr 07, 2025, 12:34 PM ISTUpdated : Apr 07, 2025, 12:52 PM IST
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல்வேறு பிளவுகளை சந்தித்து வருகிறது. தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sengottaiyan Edappadi conflict : தமிழக முதலமைச்சராகவும், பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நாள்தோறும் புதுப்புது பிரச்சனைகளை அதிமுக சந்தித்து வருகிறது. அந்த வகையில் தலைமை பதவியை பிடிக்க நடைபெற்ற போட்டியில் அதிமுகவானது பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது.
ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் என தனித்தனி அணியாக உருவாகியுள்ளது. இதனால் தேர்தல் களத்தில் வாக்குகள் சிதறி எதிர்கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு உருவாக்கி கொடுத்துள்ளது. எனவே பிரிந்து சென்ற அதிமுக தலைவர்கள் ஒன்றினைய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
25
Eps and former minister sengottaiyan
எடப்பாடியை எதிர்க்கும் செங்கோட்டையன்
ஆனால் இதற்கு தற்போது அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகியோரை இணைக்க வாய்ப்பே இல்லையென உறுதியாக கூறி வருகிறார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூத்த தலைவர் செங்கோட்டையன் தற்போது போர்கொடி தூக்கியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த அவர், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தும் வந்தார். மேலும் பிரதமர் மோடியை புகழ்ந்தும் நிகழ்ச்சியில் பேசினார்.
35
sengottaiyan
பாஜக தலைவர்களை சந்தித்த செங்கோட்டையன்
பாஜக தலைவர்களை டெல்லியில் தனியாக சந்தித்து செங்கோட்டையன் ஆலோசனையும் நடத்தினார். எனவே செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு சில அதிமுக நிர்வாகிகள் கூறி வந்த நிலையில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி, இந்த சூழ்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என கேள்வி எழுப்பி தங்களது சட்டையில் பேட்ஜ் அணிந்திருந்தனர்.
45
இபிஎஸ் வெளியே- செங்கோட்டையன் உள்ளே
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற போர்டையும் சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேட்ஜே நீக்க சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
மேலும் 7 அதிமுக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவு பிறப்பித்தார். இதனால் அதிருப்தி அடைந்த அதிமுகவினர் சட்டசபையில் வெளிநடப்பு செய்தனர். சட்டசபை வளாகத்தில் அமளியிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து வெளியே சென்ற இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவினர் செயல்பாடுகளை விமர்சித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
55
செங்கோட்டையன் நிலைப்பாடு என்ன.?
இந்த களேபரத்திற்கு மத்தியில் அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையன் அதிமுக உறுப்பினர்களோடு வெளியே சென்று விட்டு மீண்டும் ஒரு சில நிமிடங்களில் உள்ளே வந்தார். சட்டசபை கூட்டத்தில் இருந்து வெளியேறாமல் அவைக்குள்ளே இருந்தார். தனது தொகுதியில் உள்ள சாயக்கழிவு பிரச்சனை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் கலந்து கொண்டு பேசினார். எனவே கடந்த சில வாரங்களாக அரசல் புரசலாக பேசி வந்த இபிஎஸ்- செங்கோட்டையன் மோதல் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.