இதுகூட தெரியாதா? பாம்பனில் மோடியின் பேச்சுக்கு ப. சிதம்பரம் பதிலடி!

Published : Apr 07, 2025, 12:20 PM IST

தமிழகத்திற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கியதாக மோடி கூறியதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். பொருளாதார அளவீடு எப்போதும் அதிகமாகவே இருக்கும், விகிதாச்சார அடிப்படையில் நிதி ஒதுக்கப்படுகிறதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

PREV
14
இதுகூட தெரியாதா? பாம்பனில் மோடியின் பேச்சுக்கு ப. சிதம்பரம் பதிலடி!
P Chidambaram on Modi's Remark

2014ஆம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ​​தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு மூன்று மடங்கு அதிக நிதி ஒதுக்கியதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது "பொருளாதார அளவீடு" எப்போதும் அதிகமாகவே இருக்கும் என்பதை முதலாம் ஆண்டு பொருளாதார மாணவர்கூட சொல்ல முடியும் என்றும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். இது தொடர்பாக ப. சிதம்பரம் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

24
Narendra Modi in Pamban

ப. சிதம்பரம் விமர்சனம்:

"2004-14 காலகட்டத்தில் வழங்கப்பட்டதை விட 2014-24 காலகட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அதிக பணம் வழங்கியதாக பிரதமரும் மத்திய அமைச்சர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர். உதாரணமாக, தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு தனது அரசாங்கம் முன்பைவிட ஏழு மடங்கு அதிகமாக நிதி வழங்கியுள்ளதாக பிரதமர் கூறினார்.

பொருளாதாரம் படிக்கும் முதலாமாண்டு மாணவியிடம் கேளுங்கள். 'பொருளாதார அளவீடு' எப்போதும் முந்தைய ஆண்டுகளைவிட அதிகமாகத்தான் இருக்கும் என்று அவர் உங்களுக்குச் சொல்வார்.

 

34
Congress leader P Chidambaram

விகிதாச்சார அடிப்படையில் நிதி ஒதுக்கப்படுகிறதா?

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு முன்பைவிட இப்போது அதிகம். மத்திய பட்ஜெட்டின் அளவும் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டைவிட அதிகமாக உள்ளது. அரசாங்கத்தின் மொத்த செலவும் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விட அதிகமாகவே இருக்கிறது.

உங்கள் வயதும் முந்தைய ஆண்டை விட ஒரு ஆண்டு கூடிவிட்டது. 'எண்களின்' அடிப்படையில், எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும். ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி, மொத்த செலவினங்களின் விகிதாச்சாரத்தில் இது அதிகமாக உள்ளதா?" என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

44
Fund allocation to Tamil Nadu

பாம்பனில் மோடி பேச்சு:

நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஆளும் திமுக மத்திய அரசைக் கடுமையாகக் குற்றம்சாட்டிவரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் பாம்பன் பாலத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி, ​​2014க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு மூன்று மடங்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளதாகக் கூறினார்.

இந்த அதிகரித்த நிதி தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். சிலர் எவ்வளவு நிதி கொடுத்தாலும் அழுதுகொண்டே இருக்கிறார்கள் என்றும் மோடி கூறினார்.

Read more Photos on
click me!

Recommended Stories