சார் ஆய்வாளர்கள் காலி பணியிடம் 2000, வயது வரம்பு 33 ஆக உயர்த்தனும்.! தமிழக அரசுக்கு பறந்த அறிக்கை

Published : Apr 07, 2025, 01:12 PM IST

தமிழக காவல்துறை சார் ஆய்வாளர் தேர்வுக்கான விண்ணப்பம் தொடங்கிய நிலையில், காலிப்பணியிடங்களை அதிகரிக்கவும், வயது வரம்பை உயர்த்தவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். காலியிடங்கள் அதிகமாக உள்ளதால், 2000 பேரைத் தேர்ந்தெடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

PREV
15
சார் ஆய்வாளர்கள் காலி பணியிடம் 2000, வயது வரம்பு 33 ஆக உயர்த்தனும்.! தமிழக அரசுக்கு பறந்த அறிக்கை

Vacant posts for sub-inspectors : தமிழக காவல்துறைக்கு 1299 சார் ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை இன்று தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் காலிப்பணியிடத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், வயது வரம்பை உயர்த்தவும் பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக காவல்துறையில் ஒவ்வொரு ஆண்டும் சில ஆயிரம் காவல் சார் ஆய்வாளர்கள்  ஓய்வு பெறும் நிலையில், அதனால் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப ஒவ்வொரு ஆண்டும் ஆள்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

25
Anbumani demands

காலதாமதமாக வெளியான அறிக்கை

கடந்த ஆண்டு தொடக்கம் வரை காலியாக இருந்த சார்-ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப 2024 ஜூன் மாதம் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் என்று  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு மே மாதமே அறிவித்திருந்தது. ஆனால், அறிவித்தவாறு அறிவிக்கை வெளியாகவில்லை. 

சார் ஆய்வாளர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கை 10 மாதங்கள் தாமதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கேற்ப வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தால், கடந்த ஜூலை மாதம் 30 வயது நிறைவடைந்திருந்த இளைஞர்கள் ஆள்தேர்வில் பங்கேற்றிருப்பார்கள்.  

35
Tamil Nadu SI Exam

வயது வரம்பை உயர்த்திடுக

அந்த வாய்ப்பை கடந்த ஆண்டு பறித்த தமிழக அரசு, இந்த ஆண்டு வழங்கும் வகையில் வயது வரம்பை குறைந்தது ஓராண்டாவது உயர்த்தியிருக்க வேண்டும்.  சார் -ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 33 வயது, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 35 வயது, பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு 38 வயதாக உயர்த்த வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தியிருந்தேன். அதை செயல்படுத்த சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தவறியிருப்பது நியாயமல்ல.

45
Tamil Nadu SI Exam Age Limit

அதிகரித்த காலிப்பணியிடம்

அதேபோல், தமிழக காவல்துறையில் கடந்த ஆண்டு திசம்பர் 11-ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 2219 காவல் சார்-ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.  அந்த எண்ணிக்கை இப்போது 2600-ஐ தாண்டியிருக்கக்கூடும்.  621 சார் ஆய்வாளர்கள் நியமனம் நிலுவையில் இருக்கும் நிலையில்,  குறைந்தது 2000 சார் ஆய்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், அதில் மூன்றில் ஒரு பங்கு குறைவாக 1299 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இது போதுமானதல்ல.

55
Tamil Nadu SI Exam

2000 காலிபணியிடமாக அதிகரியுங்கள்

காவல்துறையின் வலிமையையும், தேர்வர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை  பொதுப்பிரிவினருக்கு 33 வயது, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 35 வயது, பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு 38 வயதாக உயர்த்த வேண்டும்.  அதேபோல், தேர்ந்தெடுக்கப்படவுள்ளவர்களின் எண்ணிக்கையை 2000 ஆக உயர்த்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories