Published : Jan 07, 2025, 05:35 PM ISTUpdated : Jan 07, 2025, 05:43 PM IST
சீனாவில் உருவான HMPV தொற்றால் இந்தியாவில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரியில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதன் முதலில் சீனாவில் உருவான கொரோனோ வைரஸ் கோரத்தாண்டவம் ஆடிய நிலையில் தற்போது சீனாவில் உருவான HMPV தொற்றால் உலக நாடுகள் மீண்டும் பீதி அடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி கர்நாடகாவில் 2, தமிழ்நாட்டில் 2, நாக்பூர் 2, குஜராத்தில் 1 என நாடு முழுவதும் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
25
HMPV News
இதனிடையே தமிழகத்தில் HMPV தொற்று பாதிக்கப்பட்டவர்கள் நலமுடன் இருக்கிறார்கள். அச்சம் தேவையில்லை. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம். HMPV வைரஸ் வீரியம் மிக்கது அல்ல. வீரியம் குறைந்தது தான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உதகையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு: கர்நாடக, கேரளா மாநிலங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நோய் பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நீலகிரி மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
45
Face Masks

மேலும், வரும் பொங்கல் தொடர் விடுமுறைக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். இதற்காக மாவட்டம் நிர்வாகம் சார்பில் போக்குவரத்து நெரிசலை தடுக்க பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தற்போதைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.