Erode East constituency
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிப்பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொகுதி பணிகளிலும் சட்டப்பேரவை நிகழ்விகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்று வளர்ந்து தலைவராக திருமகன் ஈவெரா கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
EVKS Elangovan
பின்னர் 2023ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக திருமகன் ஈவெராவின் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் போட்டியிட்டு சுமார் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவியேற்றார். ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே ஈவிகேஎஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி காலமானார்.
இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக இடைத்தேர்தலை ஈரோடு கிழக்கு தொகுதி சந்திக்க உள்ளது. எனவே ஒரு சட்டமன்ற தொகுதி காலியானால் 6 மாத காலத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதியாகும். அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Election Commission
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ம் தேதி எண்ணப்படுகின்றன. வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும் 17ம் தேதி கடைசி நாள். இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 20 தேதி வெளியாகும். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
DMK
ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சி ஒதுக்கப்படுமா? அல்லது ஆளுங்கட்சியான திமுக போட்டியிடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட அதிமுக இந்த முறை போட்டியிடுமா என்பதை பார்க்க வேண்டும்.