Governor RN Ravi
2025ம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம். அதன்படி ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவைக்கு வந்து உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஆளுநர் அவையில் இருந்து வெளியேறியது சர்ச்சையானது.
இதையும் படிங்க: இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல! ஒரே ட்வீட் போட்டு ஆளுநரையும், திமுகவையும் சீண்டிய விஜய்!
AIADMK
மறுபுறம் அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தவிர மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டும் வகையில் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் "யார் அந்த சார்" பேட்ஜை அணிந்து இருந்தனர். அதுமட்டுமல்லாமல் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி வேண்டும் என்ற பதாகைகளை கையில் ஏந்தி அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சட்டமன்றத்தில் இருந்து அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை! போக்குவரத்துறை வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு!
Edappadi Palanisamy
இன்று தமிழக சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டம் நடந்த போதும் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். ஆனால் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக விசாரித்த போது எடப்பாடி பழனிசாமி கடுமையான காய்ச்சல் அவதிப்பட்டு வருவதால் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
selvaperunthagai
இதனிடையே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றிருக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார் குறிப்பிடத்தக்கது.