HMPV virus china
மீண்டும் அச்சுறுத்தும் வைரஸ்
கொரோனா வைரஸ் காரணமாக உலகமே பாதிக்கப்பட்ட நிலையில் நொடிக்கு நொடி மரணம் ஏற்படுத்து அதிர்ச்சி அடையவைத்தது. இந்தியாவிலேயும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். சுமார் 3 ஆண்டுகள் கொரோனா பாதிப்பில் சிக்கிய மக்கள் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் மீண்டும், மீண்டும் அச்சுறுத்தும் வகையில் புதிய, புதிய வைரஸ் பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் என்று அழைக்கப்படும் HMPV வைரஸ் ஆனது கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
HMPV virus
சீனாவில் இருந்து பரவும் வைரஸ்
இதனால் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமோ என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த HMPV வைரஸால் எந்த பாதிப்பும் ஏற்படாது என நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் HMPV வைரஸ் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், HMPV வைரஸ் பற்றிய செய்தி வெளியானவுடன் தொடர் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொற்று நோய் பரவும் காலத்தில் பொதுவாக அவசர நிலை வந்தால் உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து அறிவுறுத்தல் வருவது வழக்கம்,
HMPV virus
HMPV வைரஸ்- தனி சிகிச்சை இல்லை
அது போல HMPV வைரஸ் தொடர்பாக இதுவரை எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என கூறினார். மேலும் மத்திய சுகாதாரத்துறையிடம் இருந்தும் நேற்று மாலை வரை எந்த அறிவுறுத்தல்களும் வரவில்லை எனவும் தெரிவித்தார். HMPV வைரஸ் குறித்து பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை என கூரிய அவர், Hmpv வைரஸ்க்கு என்று தனி சிகிச்சைகள் எதுவும் இல்லையென தெரிவித்தார்.
இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மூன்று முதல் நான்கு நாட்களில் அதுவாகவே சரியாகிவிடும் எனவும் கூறினார். தமிழ்நாட்டில் இதுவரை சேலத்தில் ஒருவருக்கும் ,சென்னையில் ஒருவருக்கும் HMPV வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் தற்போது நலமுடன் உள்ளதாக தெரிவித்தார்.
Minister Ma Subramanian
முக கவசம் அணிவது நல்லது
HMPV வைரஸ் குறித்து வரும் வதந்திகள் மக்களை அச்சமடைய செய்துள்ளது, சீனாவில் இருந்து தமிழர் ஒருவர் வெளியிட்ட காணொளியில் அங்கு சகஜ நிலை நிலவுவதை உணர்த்தியுள்ளார். எனவே மக்கள் இதுகுறித்து அச்சமடையத் தேவையில்லை என தெரிவித்தார்.
வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள், பொதுவெளியில் செல்லும் போது முக கவசம் அணிவது நல்லது என கூறினார். அடிக்கடி கை கழுவுவது தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது, போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.